பக்கம்:தாய் மண்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

  • ஐயையோ தெய்வத்தைத் திட்டக்கூடாது சீதை!...” என்று பதட்டத்துடன் கூறினுள் அவள். சீதையின் அன்பைப்

அழுது திர்ப்பது போதா தாம்மா? நீ வேறு ஆ. வேணுமா. என்ன?’ என்றாள், சீதை யின் கண்களேத் துடைத்துவிட்டாள். அவளே வழி அனுப்பி வைத்தாள் .

மனம் பேதலிக்கும் சமயங்களில் அவள் தமிழ்மறை”யை நாடுவது வழக்கம். நாடினுள். தமிழ்மறையைச் சுடுகரம் நாடியது.

மீண்டும் வந்தாள் சீதை. “அக்கா, அக்கா! எங்க அண்ணுச்சி பட்டாளத்திலேருந்து இன்னம் பத்துப் பதினஞ்சு நாள் டயத்துக்குள்ளாற வந்துடுமாம்! மிலிட்டரி ஆள் சொல்லிட்டுப் போனங்களாம் ஜீப் காரிலே! என்று. பாசத்தின் நெருக்கமான பிணைப்புடன் தெரிவித்தாள்.

“ரொம்ப சந்தோஷம் சீதை’ சீதை போய்விட்டாள். எதிர்ப்புற வீட்டில் புதுமணத் தம்பதியரின் பேச்சும் சிரிப்பும் புத்துருக்கு நெய்யென மணத்தன.

சாப்பிட்டோமென்று பேர் பண்ண எண்ணியவளாக: தமிழரசி உணவுக் கலத்தின் முன் அமர்ந்தாள்.

செய்தி வாசிப்பு அப்போதுதான் முடிந்திருந்தது, ரேடியோவில்,

சாப்பிட்டு எழுந்தாள். கை கழுவினுள். உள்ளே திரும்புகையில், “விஸ்டர்’ என்ற குரல் கேட்டது.

கேட்டுப் பழகிய குரல்.

பார்த்துப் பழகிய முகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/34&oldid=664102" இலிருந்து மீள்விக்கப்பட்டது