பக்கம்:தாய் மண்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

உணர்ந்து பழகிய மனம்,

அழைத்தவள் சுடர்க்கொடி. அவன்ைறி, விஸ்டர்!” என்று உரிமை பூண்டு, உறவு பூண்டு அழைப்பவர் வேறு யார் இருக்கிருச்கள்!

வாசலை அடைத்துக்கொண்டு நின்றது கார்.

‘வா, சுடர்க்கொடி! சாப்பிடலாம் வா!’ என்று: முகமன் மொழிந்தாள்.

“அத்தான் துரத்துக்குடி எக்ஸ்பிரஸில் திருச்சிவரை போகிறார். அவரை வழியனுப்பப் போகிறேன். நான். வழியில் உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன் பார்த்து ஒரு மாசத்துக்குக்கிட்டே ஆயிருக்குமே!’ என்று. சொல்லியபடி உள்ளே வந்து உட்கார்ந்தாள்.

“ஆமாம், ஆகியிருக்கும் என்றாள் தமிழரசி,

தமிழரசியை உன்னிப்பாகப் பார்த்தாள் சுடர்க்கொடி. “என்ன தமிழரசி, உங்க முகம் கொஞ்சம் அசைத்த மாதிரி வீங்கியிருக்குதே, உடம்புக்குச் சரியில்லையா?’ என்று. ஆதரவுடன் சொற்களை அடுக்கிள்ை. -

அவள் நலிந்த முறையில் ஒப்புக்குச் சிரித்து மழுப்பினுள்; “அதெல்லாம் இல்லை. சும்மா அப்படித் தோணும்!”

தமிழரசியின் திருஷ்டியில் மேஜைமீதிருந்த அந்தப் பதில் கடிதம் ஞ | ட க த் தி ல் உறுத்தியது. அதைத் தன் தோழியிடம் கொடுத்து பையில் சேர்ப்பித்து விடும்படி வேண்டினுள். பொழுது விடிவதற்குள் மனித மனத்தின் சபலம் எப்படி எப்படித் திசை திரும்புமோ என்று கவலை அவளுக்கு! . .

அதைச் சுடர்க்கொடி வாங்கி டம்பப் பைக்குள் திணித். தாள்:

கடிதம் சுடர்க்கொடியிடம் கைமாறியதும்தான், தமிழரசிக்கு ஒர் ஆறுதல் கனியத் தொடங்கியது. வாழ்க்கையில் யதார்த்தமானதும் நியாயமானதுமானதொரு

A.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/35&oldid=664103" இலிருந்து மீள்விக்கப்பட்டது