பக்கம்:தாய் மண்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நேர்வழியில் நடந்து கொண்டதாக அவளுக்கு உள்ளுற ஒரு பெருமிதம் கிளேத்தது. அவள் மனச்சான்று அப்படித்தான் விமர்சனம் செய்தது; முடிவும் செய்தது.

‘விஸ்டர், உங்களுக்கு என்னுேட அத்தான் அம்பலவாணனைத் தெரியாதல்லவா? அடுத்த வாரம் நீங்க பங்களாவுக்கு வரும்போது கட்டாயம் உங்களுக்கு அவரை இன்ட்ரடியூஸ் செய்கிறேன். ரொம்ப நைஸ் ஜென்டில்மேன் அவர்!...... தனி மனிதர் அவர் ரொம்பவும் இளகிய மனசு! தங்கமான அத்தானுக்கும்!” என்று பூரிப்புடன் விளக்கிளுள் சுடர்க்கொடி .

சுடர்க்கொடி பேச்சு வாக்கில் சொன்ன ‘அம்பலவாணன், எனும் பெயர் தமிழரசியை மலைக்கச் செய்தது. என்றாலும், சமாளிக்கத் தெரிந்தவள் சமாளித்துக் கொண்டாள்.

“அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி ஸிஸ்டர்!” என்று நிர்மலமாகச் சிரித்தாள், தமிழரசி,

சிரிப்பின் அலைகளிலே, பாசம் பூண்ட நட்பின் செறிவு மிளிர தோழிமார் இருவரும் சிரித்தார்கள். சிரிப்பு திமிஷங்கள் சிலவற்றை விழுங்கின.

“அத்தான் காத்துக்கிட்டு இருப்பார். வரட்டுமா லிஸ்டர்?’ என்று சொல்லி, டாடா மொழிந்து, பறந்தாள், சுடர்க்கொடி. அவளுடைய காருக்குப் பறக்கத் தெரியும் போலும்!

‘அம்பலவாணன்:- சுடர்க்கொடியின் குரல் தமிழரசி -யின் நெஞ்சில் எதிரொலி கிளப்பியது.

“யார் இந்த அம்பலவாணன்?...”

தமிழரசி சிலை ஆளுள் !

சிலே தமிழரசி ஆனது!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/36&oldid=664104" இலிருந்து மீள்விக்கப்பட்டது