பக்கம்:தாய் மண்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

” உங்க இனிஷியல் என்ன ? :

கான்கு

விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை,

பொழுது சுவபமாகவும் எளிதாகவும் விடிந்துவிடும்.

அதற்குத் தடைபோட, இது அனசூயை யுகம் அல்லவே!

பொழுது விடிவதும் விடியாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். -

ஆனால், அன்றையப் பொழுதுக்குப் பதில் சொல்ல வேண்டாமா?

அன்று சனிக்கிழமை.

அரைப்பள்ளிக்கூடம்,

காலத்தின் சுறுசுறுப்பும். கடமையின் சுறுசுறுப்பும் போட்டி போட, தமிழரசி மூன்று வகுப்புக்களே முடித்துக் கொண்டாள். முந்நீர் விழா, குறில்-நெடில் விளக்கம், இந்திராவுக்கு ஜவாஹரின் கடிதங்கள் முதலிய பாடங்கள் போதிக்கப்பட்டன.

அடுத்த நாற்பத்தைந்து நிமிஷம் அவளுக்கு ஒய்வு. என்றாலும், ஆரும் வகுப்பு ஆசிரியைக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை. அவ்வகுப்பைத். தமிழரசி பார்த்துக் கொள்ளும் படி மேலிடம் பணித்தது. அவன் சென்றாள். செல்லும் தருணம், பருகிய காப்பியின் சுகம் அவளுக்குத் தெம்பளித்தது. கையில் கொண்டு போயிருந்த புத்தகங்கள் சஞ்சிகைகளை மேஜைமீது வைத்து விட்டு அமர்ந்தாள். அவ்வகுப்பு மாணவிகள் எழுந்து நின்று அமர்ந்தார்கள். ஒருமுறை வகுப்பை நோட்டம் பதித்தாள்.

கோடியில் சிறுமி ஒருத்தி காணப்பட்டாள். சீனத்துச் சிறுமி. அவளைப் பார்த்ததும், ஒருமுறை தன்னுடைய ஆசிரியைத் தோழி தன்னிடம் சொன்ன விருத்தாந்தத்தை. நெஞ்சில் கொண்டாள், தமிழரசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/37&oldid=664105" இலிருந்து மீள்விக்கப்பட்டது