பக்கம்:தாய் மண்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

அப்போது சீனுக்காரன் இந்திய மண்ணைச் சுவைத்து ருசி பார்க்க முனைந்த நெருக்கடி மிகுந்த நேரம். இந்தச் சீனப் பெண் சிங்மிங் பள்ளிக்கு வந்திருக்கிருள். வகுப்பில் ஒரு பேசவில்லையாம். சிறுமிக்குக் காரணம்

- :ன் பிறந்ததென்ன னோ சீன நாட்டி ஞல், என் மனசு வளர்ந்தது உங்க மண் ணிலேதான்; அதாவது, எனக்கும் சொந்தமான இந்த மண்ணிலே தானுக்கும் எங்க நாட்டுக்காரன் செஞ்ச அநியாயத்துக்கு நீங்க என்ளுேடே பேசாமல் இருந்தா இது நியாயங்காப்படுதா, அக்காமாருங்களே! இப்ப வாங்க, எங்க வீட்டுக்கு, அங்கே காந்தி மகாத்மாவும் நேருஜியும்தான் எங்க வீட்டிலே இருப்பாங்க. சங்க நாட்டுத் தலைக்களே ஒண்னுகூட நீங்க காணமுடியாது!’ என்று அழகான தமிழில் உணர்ச்சிப் பேருக்குடன் பேசிளுள் இப்பேச்சைக் கேட்க நேர்ந்த வகுப்பின் ஆசிரியை அச்சிறுமியின் விவேகமான பேச்சைக்கேட்டு மனம் நெகிழ்ந்து, உடனே தலைமைப் பீடத் தில் இவ்விவரத்தை எடுத்துரைத்தாள். அதிலிருந்து, அந்தச் சீனத்துச் சிங்காரச் சிறுமி என்றால், அப்பள்ளியில் தனிப் பாசம்தான்! அவளைப் பார்த்துப் பெருமையுடன் புன்னகை பூத்தான் தமிழரசி...!

மாணவிகளைப் பார்த்து, இப்போது என்ன பாடம்?” என்று கேட்டாள்.

“சமூகம்!’

“அப்படியா?” என்று சொல்லி, ஒரு விடிை நிறுத் தினுள்.

“டீச்சர், டீச்சர், இப்போது நடக்கிற சண்டையைப் பத்திச் சொல்லுங்க உச்சர்!’ என்று பேசி வைத்த மாதிரி ஒரே குரலில் கேட்டுக் கொண்டார்கள். -

வளர்ந்து வரும் இளைய பாரதத்தினரின் வீறு மிக்க எழுச்சியைப் படிப்படியாகக் கவனித்து வரும் தமிழரசிக்கு அவ் வகுப்பின் இளம் நெஞ்சங்களின் தேசப்பற்று மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/38&oldid=664106" இலிருந்து மீள்விக்கப்பட்டது