பக்கம்:தாய் மண்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பேர் தெரியாத அனதை நீ! அப்படின்னு ஏசிட்டுதாம். இந்தப் பேச்சைப் பொறுக்காத அந்த அனுதைப் பெண் பாவம், மனசு நொந்து கிணத்திலே விழுந்திருக்குது. நல்ல வேளை தப்பிட்டுது!’ என்று சொல்லிச் சென்றாள்.

தமிழரசியின் சிவந்த முகம் வெளுத்து விட்டது. மனம் கலங்கி, விழி கலங்கிளுள். தன்னை நினைத்து, விதியை நினைத் தாள். விதியை நினைத்து, வினையை நினைத்தாள். வினையை நினைத்து, ஆண்டவனை நினைத்தாள்!...

அதற்குள் மணி அடிக்கப்பட்டது.

வாத்தியாரம்மாக்களின் ஏகோபித்த நாட்டுப்பற்றுக்கு நீச்சயிக்கப் பட்ட ஒர் அடையாளமாக அவரவர்களின் சம்பளத் தகுதிக்கு ஏற்றபடி சேர்ந்திருந்த யுத்தநிதி ஒர் ஆயிரத்தை எட்டிவிட்டது. அத்துடன், பள்ளியின் நிறுவ னர், அன்று அளித்த வாக்குப்படி தம் பள்ளியின் பேரால் ஓர் ஆயிரம் அளித்தார்! இரண்டையும் சேர்த்து, மத்தியா ம்ை மூன்று மணி அளவில் தலைமை உபாத்தியாயினி சரோஜினி மூர்த்தி தன் சக ஆசிரியைகளுடன் கோட்டையின் அரசாங்க அலுவலகத்திற்குச் சென்று முதலமைச்சரிடம் நேரில் சமர்ப்பித்துத் திரும்பினர்கள். வழியில் ஆளுக்கொரு. காப்பி கிடைத்தது. இது திருமதி மூர்த்தியின் அன்பளிப்பு. ஆசிரியை மார்களின் ஒத்துழைப்புக்கு நன்றியைப் பற்றாக்கி, காப்பிக்கெனச் சொல்லப்பட்ட நன்றியை வரவாக்கிளுள் தலைமை ஆசிரியை. -

அண்ணுமலை மன்றத்தை முச்சந்தியாக்கிப் பிரிந்தவர்கள் போக மிச்சப் பேருக்குச் சட்டக்கல்லூரி நாற்சந்தி ஆனது.

தமிழரசி குடையை விரித்தாள். இறங்கு முகச் சூரியனைத் தன்குடை நிழலில் ஆண்டாள்.

‘பாரிஸ் கார்னர் வந்தது.

நேரே அறைக்குப் போகலாமா என்று மறுகினள். நாளைக்குத்தான் லீவு இருக்கவே இருக்கிறது. இன்றுள்ள மிகுதிப் பொழுதைக் கழிக்கவேண்டுமே! ரேடியோப் பேச்சுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/40&oldid=664109" இலிருந்து மீள்விக்கப்பட்டது