பக்கம்:தாய் மண்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அவளுக்கு மகிழ்வு பூம்புனல் வெள்ளமாகப் பாய்ந்தது; மடை கட்டிப் பாய்ந்தது.

ரத்தச் சிவப்பை அள்ளிப் பூசிக்கொண்டு வானம் விளங் கியது. அதனிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு ரத்தத்தை வண்ணமாக்கிப் பூசிக்கொண்டு பவனி வந்தன டவுன் பஸ்கள்.

அவள் செல்ல வேண்டிய பஸ் வந்து நின்றது.

கால் செருப்பில் இடறிய சேலையின் கரைக்கட்டுப் பகுதியை ஒதுக்கி விட்ட வண்ணம், வண்ணச்சேலை வண்ண ஒளியில் வண்ணம் காட்டித் திகழ, பஸ்ளினுள் ஏற முனைந் தாள்.

அப்போது. “டிச்சர்!’ என்ற குரல் கேட்டது.

தமிழரசி விரைவு பாய்ச்சி ஏறிய அதே துரித கதியுடன் இறங்கிளுள். பஸ்ஸின் கண்ணுடி வழியே மஞ்சள் வெயில் ஊடுருவி, அது தமிழரசியின் சிவந்த கன்னங்களைத் தழுவியது. அவளுடைய கோல விழிகள் கூசின. காதளவில் பிசிறு தட்டிக் கிடந்த பூமயிர் இழைகளைக் கோதிவிட்டுக் கொண்டு படிதாண்டி மண் மிதித்தாள். ஸ்டெட் இரண்டும் மின்னின. r .

சாக்கடைக் குழாய்களைப் பொருத்துவதற்காகப் பள்ளங்கள் வெட்டப்பட்டிருந்தன. ஆகவே, நாகுக்காகச் சேவையைக் கொய்துகொண்டு வெகு லாகவமாக அப் பள்ளத்தைத் தாண்டினள். உச்சர்! சுகமா?’ என்று மீண்டும் அதே குரல் ஒலித்தது. குரலில் பண்புடன் கூடிய பாசம் பேசியது.

தமிழரசி அக்குரலுக்குடைய இளைஞனே நிமிர்ந்து பார்த்தாள்; ஆணவமான நெஞ்சழுத்தத்துடன் பார்த்தாள். அப்பார்வை அந்த இளவட்டத்தை வட்டமிட்டுச் சுற்றி முடித்து, பிறகு, வட்டத்தைவிட்டு அந்த இளவட்டத்தை விடுதலை செய்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/42&oldid=664111" இலிருந்து மீள்விக்கப்பட்டது