பக்கம்:தாய் மண்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

‘சுகமாய் இருக்கீங்களா?’

ஒ: “என்னைத் தெரிகிறதா?” **go i ! -

~

சென்னை மாநகராட்சியின்டால் அடங்கிய உயர்நிலைப் பள்ளிக்கூடங்களுக்குள்ளே ஒரு பேச்சுப் போட்டி தமிழில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்தது. அதில் தமிழரசியும் எஸ். எஸ். எல். சி. வகுப்பின் சார்பாகக் கலந்து

கொண்டாள். இந்த இளைஞனும் போட்டிக்கு வந்தான். இவனுக்குப் பெயர் இருந்தது. அது தில்லைக்கூத்தன் என்பதாகும். தில்லை வாசி. பணத்தில் படகோட்டும் “பாக்கியசாலிக் குழந்தை! - இவை அவளுக்குப் பின்னர் கிடைத்த புள்ளி விவரங்கள்.

போட்டி நடந்தது.

முதற்பரிசு தமிழரசிக்குத்தான்!

பொருமை வந்து தொலைத்தது இந்தப் பிள்ளையாண்டா னுக்கு. அப்போது, இந்த ஹிட்லர் மீசையை வைத்துத் தொலைக்கத் தைரியம் வரவில்லை. இருந்தாலும், வாய்ச் சவடால் அடிக்கமட்டும் தைரியம்-அசட்டுத் தைரியம் வந்தது போலும் பொம்டளேன்கு ஒரு மவுஸ்தான்! நான் மட்டும் குறைச்சலாவா பேசினேன்?’ என்று தன் லுடைய சகாக்களுடன் வழியில் நின்று வம்பளந்து கொண் டிருந்தான்.

குறுக்கிட்டுச் சென்றாள் தமிழரசி, பரிசுப் பதக்கம் கையிலும், நகை முத்து இதழிலும் குலுங்க. அவளுக்கு அவன் பேச்சுக் கேட்டது. அவள் கேட்கவேண்டுமென்று தானே அவனும் பேசினன்?

ஆனல், விளைந்தது என்ன தெரியுமா?

“மிஸ்டர். இவ்வளவு ஆண்களுக்கு ஊடே பெண்ணுன நான் வெற்றி பெற்றுவிட்டேனே என்கிறதிலே எனக்குத் தற்பெருமை கூடுதல்தான். அதுக்காக உங்ககிட்டே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/43&oldid=664112" இலிருந்து மீள்விக்கப்பட்டது