பக்கம்:தாய் மண்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

என் பெருமையைத் தம்பட்டமடித்தேளு? நீங்கள் தோற்று விட்டீர்கள். அதை மறைக்கிறதுக்காக, எதற்கு வீணுக என்னைத் தாழ்த்திப் பேச வேணும்? நீங்க அக்கா தங்கச்சி யோடே பிறந்தவர்தானே? தமிழ்ப் பண்பாட்டைப் பத்தி நீங்க நாலு பேர் மெய்க்கப் பேசுவீங்க; ஆன. அதே பண்பாட்டைக் காப்பாத்திக்கிட மட்டும் தெரியாது. என் மாதிரி தலைநிமிர்ந்து நடக்கிறதுக்குப் பழ குங்க. தலை குனியாதிங்க... ... போங்க...! தமிழ்ச் சமுதாயத்திலே தமிழ்ச்சாதிக்கு மதிப்பும் கவுரவமும் அதிகம். அதைக் காப்பாத்துறதுக்கு உங்க அளவுக்குப் பாடுபடுங்க!... வம்பை விலை குடுத்து வாங்காதீங்க! அன்டை: வாங்கறதுக்கு விலை கொடுக்க வேணும்!... போயிட்டு வாரீங்களா பிரதர்?’ என்று ஒரு போடு போட்டாள் தமிழரசி,

அவ்வளவுதான். இளவட்டம் தில்லைக்கூத்தன் தன் வாலைச் சுருட்டிப் பத்திரமாக “ஸ்லாக் ஷர்ட்டின் ைபக்குள் வைத்துக்கொண்டு நண்பர் குழாத்துடன் “தலே தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று தலைமறைந்து, ஓர் ஆலமரத்து முடுக்கில் நின்று நாலு சிகரெட்டை ஒட்டு மொத்தமாக இழுத்து முடித்ததும்தான் அவன் முகத்தில் வழிந்த அசட்டுக்களை கொஞ்ச நஞ்சமாவது மறையத் தொடங்கியது.

நடந்த நடப்பைச் சுற்றி நடந்து மீண்டாள் தமிழரசி, மார்புடன் அனைத்திருந்த புத்தகங்களைச் சற்றே நெகிழ்த்துக் கொண்டாள். இளைஞனத் தலைநிமிர்ந்து நோக்கினுள்.

இல்லைக்கூத்தன் இப்போது கண்ணியமான மலர்ச் சிரிப்புடன் அவளிடம் ஒரு திருமண அழைப்பைக் கொடுக்கத் தயாராக நின்றன். பேளுவைத் திறந்து வைத்துக்கொண்டு, “'உங்க இனிஷியல் தெரியலே. இனிஷியல் என்ன?’ என்று கேட்டான். -

இக்கேள்வி அவளது முகமலர்ச்சியை உண்டது. என்றாலும், சமாளித்துக்கொண்டு, “பேர் எழுதியாச்சில்ல. அது போதும்’ என்று அவள் தடுமாற்றத்துடன் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/44&oldid=664113" இலிருந்து மீள்விக்கப்பட்டது