பக்கம்:தாய் மண்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இந்தப் பாடல் வரியை ஒரு நாளைக்கு ஒரு தரமாவது சொல்லிப் பார்க்காமல் இருக்கமாட்டாள் தமிழரசி,

பஸ் ஒட்டமாக ஒடிக் கொண்டிருந்த அந்நேரத்திலும்கூட அவளுக்கு அவ்வரி மறக்கவில்லை. அத்துடன், இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்ன சித்தாந்தத்தையும் அவள் மறக்கவில்லை. ஆகவேதான், அவள் சிரித்தாள்; அதாவது, தன்னுள் சிரித்தாள். மூடியிருந்த சிவந்த அதரங்களே உள் வட்டமாகச் சுற்றியவாறு இருந்த சிரிப்பின் அலேகளே அவள் செவிகள் மட்டுமே கேட்டன. ஆனல், அவள் மனம் அவளேயும் மீறிக் கொந்தளிப்புக் காட்டியது. என்ன பாடு பட்டும் அவளால் அதைக் கட்டுப்படுத்தக்கூட முடியவில்லை. ஏதேதோ சம்பவங்கள் சட்டை உரித்துக்கொண்டு ஏடு விரிந்தன.

எதை நினைப்பாள்?

எதை மறப்பாள்?

அளுதை என்ற ஏச்சுப் பேச்சைக் கேட்கச் சகிக்காத பிஞ்சுச் சிறுமி, மனம் வெறுத்துக் கிணற்றில் விழுந்த நிசழ்ச்சியை அவள் மறுபடியும் உணர்ந்து பார்த்தபோது, அவளுக்குச் சம்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. நானும் ஒர் அைைததான். ஆளுல், நான் மட்டும் உயிரோடு இருக் கிறேன்! - இதற்கு மேலே அவளால் எதையும் தொடுக்க. முடியவில்லே. காரணம், அவளுக்குக் கண்ணிர் கரை யுடைத்துக்கொண்டு வந்ததுதான்.

டிக்கட் பரிசோதனை நடந்தது.

இந்த மனம் இருக்கிறதே மனம், அதற்கு ஒரு கண மேனும் கம்மாவே இருக்கத் தெரியாதோ? -

“உங்க இனிஷியல் என்ன?”

தில்லைக்கூத்தன் கேட்ட கேள்வி இப்போது அவளை ரம்ப மாக அறுத்தது. நெஞ்சத்தில் துள்ளி விளையாடிக் கொண் டிருந்தன வண்ணத்துப் பூச்சிகள். மனத்தின் உள்ளே ஏற். பட்ட சலனம் உடல் வெளியில் வேர்வையாக வழிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/46&oldid=664115" இலிருந்து மீள்விக்கப்பட்டது