பக்கம்:தாய் மண்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அவள் இடுப்பை நகர்த்தி நிமிர்ந்து குந்தினுள். உடை களேச் சரி செய்தாள். நின்றிருந்த பிரயாணி ஒருவன் பிராணியாகத் தன்னை ஆக்கிக்கொண்டு, தன்னையும் தன்னக் சுற்றியும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். உடன் பிறந்தாளுடன் உடன் பிறக்காத சகோதரர் போலிருக்கிறது!’ அவனை ஏளனமாகவும் அனு தாபத்தோடும் அவள் பார்த்தாள். அந்த இளவட்டத்தின் திருஷ்டி அவளிடமிருந்து விலகி, அவளுக்கு அருகில் இருந்த இடத்துக்குத் திருஷ்டி கழித்தது.

இப்போதுதான் தமிழரசிக்குத் தன் பக்கத்தில் இருந்த பெண்ணேப் பார்க்கத் தோன்றியது. பார்த்தாள்.

அந்த யுவதி நாகரிகத்தை உபாசிப்பவளாக இருக்க வேண்டும். உடம்பு மட்டும் ஈர்க்குச்சிதான். மற்றப்படி ஒன்றும் சோடை இல்லை. இடுக்கு விழுந்த கண்கள். அதை மறைக்க கறுப்புக் கண்ணுடி, “இண்டு இடுக்கு, இல்லாமல் முகம் பூராவிலும் பவுடர் அபிஷேகம்-பவுடர்க்காப்பு. அம்மனுக்குச் சந்தனக்காப்பு சாத்துவது இல்லேயா, அப்படி! கழுத்தில் ஒன்றையும் காளுேம். சரிந்து கிடந்த மேலாக் கைச் சரி செய்து கொள்ளக்கூட அவள் அக்கறை கொண்ட தாகத் தெரியவில்லை. பிசகிச் கிடந்த கவர்ச்சியை ரசிக்கத் தான் அந்தக் கழுகுக் கண்கள். அப்படி மொய்த்தனவோ?

தமிழரசிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. பக்கவாட். டில் திரும்பி, அந்த நாகரிகப் பழத்தின் தோளை மிருதுவாக நிமிண்டினுள். “இந்தாப் பாருங்க!... துக்கமா?... மேலாக்கை எடுத்துப் போட்டுக்கிட்டு துரங்குங்க!’ என்று ஆத்திரமாகக் கூறினாள் தமிழரசி, தன்னைச் செம்மை படுத் திக் கொண்ட அந்த நாகரிகம்’ அசட்டுச் சிரிப்பைக் காட்ட வாயைத் திறந்தது. எட்டு ஊருக்கு வாடை அடித்தது.

தமிழரசிக்குக் குமட்டியது, தமிழ் மணம் அவள் பார் வைக்கு ஓடி வந்தது. அந்த யுவதி, “நீங்க படிக்கிறீங்களா?” என்று வாத்தியாரம்மாவிடமே வாத்தியாரம்மாவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/47&oldid=664116" இலிருந்து மீள்விக்கப்பட்டது