பக்கம்:தாய் மண்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

போலக் கேள்வியைச் சொடுக்கி விட்டாள். சாட்டை சொடுக்கின பாங்கு-மாதிரி.

“படிக்கலிங்க, படிப்புச் சொல்லித் தருகிறேன். தமிழா சிரியையாய் வேலே பார்க்கிறேன்!” கேட்டதற்குப் பதில் சொல்லாமல் போனல், நயமாகத் தோன்றதே என்ற இக் கட்டுக்குப் பயந்து சொன்னுள்.

இடத்தைக் கேட்டாள்.

சொன்னுள்.

“ஓஹோ அங்கேயா? ஆஜானுபாகுவான சில்க் ஷர்ட் பணக்காரர், சொக்கநாதன் மானேஜ்மெண்டிலே நடக்குதே அங்கேயா!’ என்று கேட்டு ஒரு மாதிரியாக அவளே ஒரக் கண் பதித்துப் பார்த்தாள, அந்தப் பாவை. குரல் அழுத்திற்று. அந்த அழகியின் திருப்பார்வை அவள் வரை திருப்திகரமானதாகவோ, அல்லது தன் வரை சாதகமான தாகவோ இல்லே என்பதைத் தமிழரசியால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.

‘நீங்க என்ன செய்றீங்க?”

“நான் அர்மினியன் ஸ்டிரீட்டிலே ஒரு இங்கிலீஷ் கம்பெனியிலே ஸ்டெனுேவா இருக்கேன்!’

மறு கேள்வியைக் கேட்பதற்கு யோசித்தாள். ‘உங்க பேர்?’ என்றாள்.

“சுசீலா உங்க நேம்!’

“தமிழரசி!”

“ஓஹோ இப்பதான் நினைவுக்கு வருது...! உங்க பேரை நான் முன்னமேயே கேள்விப்பட்டிருக்கேன், அம்மா!’

இப்போது, அந்தப் பெண்ணின் பேச்சில் அவசரமான ஒரு மரியாதை ஊடுருவியது. அதல்ைதான், தமிழரசிக்கு “அம்மா’ பட்டம் சூட்டினளோ?

“எனக்கொரு நண்பர் உண்டு. அவரது –f ஸ்டுடண்ட்! உங்களைப் பத்தி ரொம்பப் பெருமையாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/48&oldid=664117" இலிருந்து மீள்விக்கப்பட்டது