பக்கம்:தாய் மண்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

சொல்லுவா. நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம்! அவ சொல்லுவா!’

தமிழாசிக்கு அந்தப் புகழ்ச் சொற்கள் வெறியையோ, போதையையோ ஊட்டவில்லை. அவற்றுக்கெல்லாம் அவள் மயங்கவும் மாட்டாள்; மடங்கவும் மாட்டாள்.

“ஆமா, உங்களுக்கு எங்க பள்ளிக்கூடத்தின் போஷ கரைத் தெரியுமா?’ என்று உள் மனத்தின் பயத்தை வெளிக் குக் காட்டிக் கொள்ளாமல் -மிகவும் சாதாரணமாகக் கேட் பவள்போலக் கேட்டாள் தமிழரசி.

‘எனக்கு எதுக்கு அவரைத் தெரியனும்?'-இந்தக் கேள்வியை ஏன் அவள் அவ்வளவு மிடுக்கான கோபத்தோடு கோட்டாள்? இந்தக் கேள்வியையே அவள் எதிர் பார்க்க வில்லையா? இல்லை, இவ்வினு அவள் கெளரவத்துக்குப் பங்கம் விளேத்ததென்று எண்ணிவிட்டாளா? அப்படியென்றால்...?

ஏதேதோ பயங்கரமான கற்பனைகள் தமிழரசியின் பேதை இதயத்தை முற்றுகையிட்டன. .

“மன்னிச்சுக்குங்க. நான் சாதாரணமாகத்தான் கேட் டேன்.”

சுசீலா தன்னுடைய வெறுமை கொண்ட ஒட்டகக் கழுத்தை வருடினுள்; சோளியின் இடது புறத்துக் கீழ்த் தொங்கலே கவர்ச்சி பூக்க இழுத்து விட்டாள். வெளுப்புத் தட்டிய உதடுகளை டவலால் தூசி தட்டினுள். “அந்த மகானுபாவர் சொக்கநாதன் செக்ஸ் விஷயத்திலே ரொம்ப மோசம்னு பேர்!” என்று மிக சாதாரணமாகச் சொல்லி நிறுத்தினுள், சுசீலா. - .

அப்பேச்சைக் கேட்டதும் தமிழரசிக்கு மனம் அதிர்ந்தது” “அது உங்களுக்கு எப்படித் தாயே அவ்வளவு கனகச்சிதமாகத் தெரிந்தது?’ என்று எதிர்க் கேள்வி வெடியை அவளுக்கு எதிரிலே வீசிப் போடத்தான் அவள் துடித்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/49&oldid=664118" இலிருந்து மீள்விக்கப்பட்டது