பக்கம்:தாய் மண்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

இந் நாவலில்.........

மண்ணின் மணத்தையும்

விண்ணின் அற்புதத்தையும்

தமிழின் இனிமையையும்

தாயின் பாசத்தையும் விளக்கமாக விவரிப் :பதோடு மனித மனங்களின் விளையாட்டுக்களையும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர் பூவை

எஸ், ஆறுமுகம் அவர்கள்.

நாட்டு விடுதலை வெள்ளி விழா ஆண்டில் ‘தாய் மண் நாவல் வெளிவருவது மிகப் பொருத்தம்.

இந்த நாட்டு மண்ணின் மானத்தைக் காப்பாற் றவும், மண்ணின் மணத்தை நுகரவும் நாட்டில் உலவும் மனித மன ஓட்டங்களின் அற்புதங்களை ரசிக் கவும் இந்நூல் பயன்படுமாதலால் இந்நாவலை மிகப் பெருமையோடு வெளியிடுகிறேன்.

‘தாய் மண்” நாவலைச் சிருஷ்டித்துத் தந்த கதைக் கலைஞரும் அற்புதமான நாவல்ாசிரியருமான பூவை எஸ். ஆறுமுகம் அவர்களுக்கு மிக்க நன்றி. வானதி பதிப்பக நூல்களே வரவேற்கும் வாசக நேயர்களுக்கும் நன்றி.

அன்புள்ள

ஏ. திருநாவுக்கரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/5&oldid=664119" இலிருந்து மீள்விக்கப்பட்டது