பக்கம்:தாய் மண்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

அந்தப் பண்பாட்டுக் குறைவு தமிழரசியைப் புண்படுத். தியது. எங்கள் ஸ்தாடகரைப் பற்றி இந்தப் பெண் சொன்ன தெல்லாம் அப்படியே உண்மையென்று எப்படி நம்புவது?... பொய் க்கு எத்தனையோ அவதாரம். ஆளுல், உண்மைக்கு. ஒரே ஒரு அவதாரம்தான்!... உண்மையின் அவதாரம் இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒரு நாள் கட்டாயம் நமக்குத் தெரியாமல் போகவே போகாது! மெய்ப் பொருள் காண்பதறிவு!- ஆமாம், மெய்யான வாக்கு தான்!... யார் எப்டடி இருந்தால் என்ன? என் தெய்வமும் என் மனச்சாட்சி யும் தான் எனக்குக் காப்பு: இந்த ஒரு. தத்துவத் ைதத்தானே எங்கள் தலைவி அடிக்கொருதரம் எனக்கு நினைப்பூட்டிப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்!... அம்மா! ... அம்மா!...” - -

‘அம்மா’ என்று தன்னுள்-தனக்குத்தானே அழைத்துக் கொண்டா ள். தன்னில் எழுந்த பாசப் பிரளயம் தன்னுள் பரவியது. -

திலகவதி அம்மையாரைப் பார்க்க வேண்டுமென்று: துடித்து, ஆனந்தத் துள்ளலுடன் புறப்பட்டவளுக்கு வழி யிலேயே மனத்துயரம் வந்தது. துயரத்தை அங்கேயே உதறிவிட வேண் டுமென்றுதான் அவள் எண்ணினுள். ஆனல், அப்படிச் செய்துவிடக்கூடிய பரிபக்குவம் அவ்வளவு சுலப மாகக் கைகூடி விடுவது இல்லையே! மனத்துயரில் கரைந்த மனத்தை வேறு நினைவில் கால்வாய் பிரித்துவிட எண்ணினுள். வெளிப்புறம் அவளது கண்கள் ஓடின. அந்தி: மாலை மணம் பரப்பத் தொடங்கிய வேளை. நீல்வானமும் நீலக்கடலும் அப்படி என்னதான் அந்தரங்கம் பேசினவோ? மீண்டும் தமிழ் மணம்’ சஞ்சிகையைப் புரட்டினள். “...ம் மா!’ என்ற புதுமாதிரித் தலைப்பில் கதையொன்று வெளியாகியிருந்தது. கதாசிரியர் மறை நாயகன் எழுதி, பிருந்த கதை அது. . . . . . . . .

ஆர்ப்பாட்டம் செய்யாத நல்ல எழுத்தாளர் இவர். சுயமாகச் சிந்தித்து எழுதி வருகிறார் வளர்ந்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/51&oldid=664121" இலிருந்து மீள்விக்கப்பட்டது