பக்கம்:தாய் மண்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சமுதாயத்துக்கு இவரது இலட்சியச் சிந்தனைகள் பெரிதும் பயன் நல்கும். சிலரைப் போல, பிறரைத் திட்டி, அதன் மூலம் குறுக்கு வழியில் வளர விரும்பாதவர், இவர். தமிழ் மனம் அலுவலகத்தில் அலுவல் பார்த்தவர். இப்போது அவராகவே விலகிக்கொண்டு விட்டாராம். என்றாலும், அப்பத்திரிகையைப் பற்றி எப்போதுமே பெருமையாகப் பேசு கிறார், அதுதானே மனிதப் பண்பு!”

கதையைப் படிக்கத் தலைப்பட்டாள். தமிழரசி, வானொலி நிலையம் தாண்டிவிட்டது. தமிழரசி வலதுகைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஒரு பெரிய பங்களா, கிளிப்பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது-தொலைவிலே!

“அதோ, அம்பலவாணன் பங்களா! என்று அவள் மனம் சுட்டியது. அப்பலவாணனுக்கு அனுப்பிய கடிதத்தின் நினைவு வந்தது. அந்த லெட்டரை மிஸ்டர் அம்பலவாணன் பார்த்திருப்பாரா? எப்படி முடியும்? ஊரிலிருந்து திரும்பி னதும்தானே அவர் அதைப் படித்திருக்க முடியும்? மேற் கொண்டு அவள் அதைப்பற்றித் தொட்டுப் பார்க்க விருப்பம் கொள்ளவில்லை. -

மாதாகோவில் வந்ததும் சிலுவைக் குறி செய்து கொண்டாள்.

கதை ஒடியது. ஒடிய பஸ் நின்றது. கதை முடிந்தது. ‘ஆஹா அற்புதமான கதை’ அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. குட திசை வயப்பட்டான் பகல் செய்வோன்.

தமிழரசி, கஸ்துசரி அன்ன அஞதை இல்லத்தை அடைந் , மதர் கிட்டே ரொம்ப சமாச்சாரம் பேசவேணும்!”

து தீர்மானம் செய்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/52&oldid=664122" இலிருந்து மீள்விக்கப்பட்டது