பக்கம்:தாய் மண்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

வான்முட்டி நின்ற அசோக மரங்கள் அவளே வரவேற்றன. பிறந்த வீட்டை மிதிக்கும் பாசத்தின் உரிமை யுடன் அவள் வெளி வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். காவிலுக்கு நின்ற சன்னசித் தாத்தா அவளைக் கண்டதும், பொக்கை வாய் நிரம்பச் சிரித்தான். ‘வாம்மா!’ - வரவேற்றான்.

தமிழரசி, “ஆமா, தாத்தா!” என்று நகை பூத்தாள். ‘உடப்பு சுகமாயிருக்குதுங்களா தாத்தா?’ என்று கேrம லாபம் விசாரித்தாள்.

நலம் சொன்னன் கிழவன்.

“மதர் இருக்காங்களா?”

‘இருக்காங்களே!... மாம்பலத்திலேருந்து சொக்கநாதர் வந்திருக்காங்க, உள்ளே பேசிக்கிட்டிருக்காங்க!”

தன் பள்ளியின் சொந்தக்காரர் வந்திருப்பதாக அவள் புரிந்து கொண்டாள்.

அச்செய்தியை அவளுடைய மனம் வாங்கிக் கொண் டதும், அவளுடைய இயல்பான துடிப்புத் தளர்ந்தது. இருந். தாலும், அவள் நேராகச் சென்றாள். இருபுறமும் வளர்ந்து நின்ற அசோக மரங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற வண்ணம் அவள் நடந்து சென்றாள்.

முகப்பில் படர்க்கொடி காவணத்தில் சொக்கநாதரின் பெரிய கார் நின்றது, -

நடந்தாள். -

அழகு நடந்து கொண்டிருந்தது.

குமாரி திலகவதி அம்மையாரின் இருப்பிடத்தை அடைந்து, வரவேற்பறையில் வந்து அமர்ந்தாள் குமாரி தமிழரசி,

அறையில் குளுமையான நீலவண்ணம் பரவியிருந்தது. ஜாதி மல்லிகைச் சரங்களின் சாரம் ஊடும் பாவுமாக விரவிக் கிடந்தது. இதமான சுற்றுச் சார்பின் அழகும் அமைதியும் அப்போதைய அவளது உள்ளப் போக்கிற்கு மிகவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/53&oldid=664123" இலிருந்து மீள்விக்கப்பட்டது