பக்கம்:தாய் மண்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

தான்-அன்பின் மூலம்தான் மற்றவர்களுக்குத் தங்கள் தியாகத்தை உணரச் செய்ய வேண்டும். அதுவேதான் பண்பு. அத்தகைய வாழ்க்கைதான் உண்மை; அசல்!” என்று திலகவதி அம்மையார் உபதேசம் செய்த வாசகங்களை அவள் தினேக்காத நேரம் உண்டா?

பஞ்சு மெத்தை ஆசனத்தில் மீண்டும் அமரப் போளுள் தமிழரசி,

அதற்குள், அம்மையாரின் கலகலவெனும் ஒலி கேட்டது. உட்காராமல் நின்றுவிட்டாள்.

அனுதை இல்லத்தின் மாதாவும் திருவாளர் சொக்கநாத னும் முன்னும் பின்னுமாக வந்தார்கள்.

‘வாம்மா தமிழரசி உடம்பு சுகமாயிருக்கிறதா?” என்று செல்லத்துடன் தமிழரசியின் தலையைக் கோதியபடி தலம் விசாரித்தாள் திலகவதி அம்மையார்.

“ஆமாங்க! சுகமாய் இருக்கிறேனுங்கம்மா!’ என்றாள் தமிழரசி, -

சொக்கநாதனுக்கு வணக்கம் செய்தாள் அவன்தமிழரசி.

“நலமாம்மா தமிழரசி?’ என்று அன்பாக விசாரித்தார் சொக்கநாதன்.

“ஆமாங்க, ஐயா!’ என்று அன்பின் மரியாதையுடன் பதில் கொடுத்தாள் தமிழரசி. - . . . தன் இருமருங்கிலும் திலகவதி அம்மையாரும் சொக்கநாதனும் நின்று கொண்டிருப்பதை எதிர்ப்புற மிருந்த நிலைக்கண்ண்டி அவளுக்குச் சுட்டியது. விழிகளே உயர்த்திப் பார்த்தாள். இனம் தெரியாத ஏதோ ஒருவித மான பாசக் குதூகலம் அவளையும் அறியாமல் கொடி மின்னலாக அவளுள்ளே கீறிப் பரவியதை அவளது உள் ஞணர்வு சொன்னது. அவ்வுணர்வின் மயக்கத்தில் அவள் கட்டுண்டு நின்றாள்.

அப்போது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/55&oldid=664125" இலிருந்து மீள்விக்கப்பட்டது