பக்கம்:தாய் மண்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

“தமிழரசி, அவசரமாக இப்போது இவங்களோடு: வாரன் ரோடு வரைக்கும் போய்க்கிட்டிருக்கேன். நாளைக்குச் சாயங்காலம் அவசியம் இங்கே வந்திடம்மா!’ என்றாள் அம்மையார்.

“நல்லது ங்க, மதர்’

காரின் “ஹார்ன் ஒலிச் சத்தம் அவளது பூமணத்தை அதிரச் செய்துவிட்டது!

அதிர்ந்த மனத்துடன் அவள் திரும்ப வேண்டியவள் ஆளுள்.

கடற்கரைக் கிளிஞ்சல்கள்

ஆறு

யார் சொன்ஞர்கள்?- காந்திஜி இறந்துவிட்டாரா?

பொய்; சுத்தப் பொய்!

அவர் மரணத்தை வென்ற மஹாத்மா ஆயிற்றே!

ஆம்:

காந்திஜி ஒர் உலகம்.

அவர் ஒர் அதிசயம்.

அதிசயமாக வாழ்ந்து, உலகத்தின் அதிசயம் ஆகிவிட் மனிதர் அவர்-அமர மனிதர் அவர் -

சொன்னதைச் செய்தார்!

செய்ததைச் சொன்ஞர்.

“அன்பு எதையும் கேட்காது: கொடுக்கத்தான் செய்யும்’ என்று சொல்லவில்லையா? சொன்னபடியே அன்பின்” பெயரால் எதையும் கேட்காமல், அன்பின் பெயரால்

த்ன்னேயே கொடுத்துக் காட்டவில்லையா?

மனதர்மமே அவராக-மனித தர்மமே அவரது அன்பின் புவனமாக இயங்கியும்,இயக்கியும் வந்த அந்த மகாத்மாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/56&oldid=664126" இலிருந்து மீள்விக்கப்பட்டது