பக்கம்:தாய் மண்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

இயற்கையென்றால் பிராணன் அல்லவா?- அதற்காகத்தான், தமக்குரிய ஒய்விடமாக இந்த மெரிஞ கடலோரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ?

அதோ, காந்தி மகாத்மா ஆழித்தென்றலிலே-கயக்கும் மஞ்சள் வெயிலிலே அன்பே உருக்கொண்டு நிற்கின்றுரே!...

கல்லாய்ச் சமைந்துவிட்ட அந்த அன்பின் உள்ளத் ைதப் பற்றிய சிந்தனையில் லயித்திருத்த தமிழரசி கல்லாகச் சமைந்து நின்றுவிட்டாள். தன் தோலைத் தொட்டு உசுப்பிவிட்ட உணர்வின் நடுக்கத்தை உணர்த்து திடுக்கிட்டுத் திரும்பி ஒள் அவள். இமை வரம்பில் விளிம்பு கட்டியிருந்த அரும்புமணிச் சரத்தை நாசூக்காக விலக்கினுள். பார்வையின் தடுமாற்றம் மாறியது. ஒரு தெளிவு பிறந்தது. நெஞ்சகத்தில் ஆறுதல் கனிந்தது.

தனக்குப் பக்கவசமாக நின்று தன்னையே வெறித்துப் பார்த்தபடி, தன்னுடன் வேலை பார்க்கும் சாவித்திரி நிற்கக் கண்டாள். கண்டதும், “வாங்க!” என்றாள், தமிழரசி,

ஆமா என்ற பாவனையில் அவள் ரசனே மிகுந்த சிரிப்பைக் காட்டினுள். ‘ஏது, ரொம். அபூர்வமா இருக்கே?” .

தமிழரசி, ‘ஒன்றும் அபூர்வம் இல்லீங்க. இல்லத்துக்குப் போய் வந்தேன். காசு பணம் கொடுக்காமல் அமைதி கிடைக்கும் இடமில்லிங்களா, இது? அதுதான், இப்படி வந்தேன்’ என்றாள்.

“நீங்கள்கூட நிம்மதியைத் தேடி வந்தீர்களா? என்று கேட்கும் விதத்தில் அவளை ஊடுருவிப் பார்த்தாள் சாவித்திரி. தானும் நிம்மதிக்காகவே அங்கு வந்திருக்கும் உண்மையைச் சொல்லாமல் சொல்லிக் காட்டியது அவள் பார்வை.

நித்தியத்தில் அரும்பி, நித்தியத்தில் மலரும் அழகின் தத்துவம் போன்று அப்போதைய கடலும், அப்போதைய சூரியனும் விளங்கின. போதையும் போதமும் பரிவர்த்தனை ஆகிக் கொண்டிருந்தன! - &

3rr. to. 4 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/57&oldid=664127" இலிருந்து மீள்விக்கப்பட்டது