பக்கம்:தாய் மண்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

“உட்கார்ந்திட்டுப் பேசலாமே!’ என்றாள் தமிழரசி, கையிலிருந்த புத்தகம் நழுவியது. அதை எடுக்கக் குனிந்த போது, கொண்டைப் பூங்கொத்தும் தழுவியது. இதை உடையவள் கவனிக்கவில்லை. உடன் நின்ற சாவித்திரி கவனித்தாள். அவள் இடது கைவிரல்களே அழுத்திக்கொண்டு குனிந்து எடுத்து அப்பூச்சரத்தைத் தமிழரசியின் கையில் வைத்தாள். மேனிச் செழிப்பம் தடுமாறி, ஒருவாறு நிலைப்பட்டது.

பூவைப் பெற்ற தமிழரசி மார்பகச் சேலையைச் செம்மைப் படுத்திக்கொண்டு, நீர் சுரந்த நேத்திரங்களால் தன் சிநேகிதி யைப் பார்த்தாள்.

சாலித்திரி விரக்திமாருத அன்பான மெல்லிளஞ்சிரிப்பை மட்டும் சிந்தினுள். அவளது நெஞ்சகம் எம்பி எம்பித் தணிந்து கொண்டிருந்தது.

ஆந்த மெல்விய சிரிப்புக்குப் பின்னே மறைந்திருந்த பயங் குரல் கொடுமையைப்பற்றி எண்ணவே பயந்தாள், தமிழரசி. ஆண்டவன் வழங்கிய பூவையும் பொட்டையும் விதி என்னும் பயங்கரக் கொடுமை பறித்துக் கொண்டதென்றால், வாழ் வின் விதியைப் பற்றி என்னவென்பது? விதி என்ற ஒன்று, வெறும் மாயை என்று அழும்பு பேச ஒரு கூட்டம் எந்தக் காலத்திலும் உருவாகிக்கொண்டுதான் வந்திருக்கிறது:அப்படி விதி என்ற ஒன்று இல்லாதிருந்தால், சாவித்திரி இவ்வாறு ‘மாஜி சுமங்கலி"யாக ஆகியிருப்பாளா? w

“பாவம்1-அனுதாபத்திற்குக் கண்ணிச் சொரியத் தெரியும்.

சாவித்திரி சொல்லியிருக்கிருள்: நினைத்தால், அவள் வாழ்வு ஒரு கதைதான்!

ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிப் படிப்பில் ஏற்பட்ட அன்பின் சகவாசத்தினுல் கனிந்த நட்பாளகைச் சாவித்திரி

- * - - o #” வின் காதலன் சுந்தரேசன் இருந்து, பிறகு, கணவன் எனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/58&oldid=664128" இலிருந்து மீள்விக்கப்பட்டது