பக்கம்:தாய் மண்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஞ் ச லி

பெண் ஒரு புதிரல்ல ; அவள் ஒரு புதுமை. தெய்வம் ஒரு புதுமையல்ல ; அது ஒரு புதிர். அன்பு ஒரு சோதனையல்ல ; அது ஒர் உண்மை. சத்தியம் ஒர் ஆணையல்ல ; அது ஒரு தர்மம். இலட்சியம் ஒரு கனவல்ல ; அது ஒர் ஆன்மா. காதல் ஒரு விளையாட்டல்ல ; அது ஒரு வாழ்வு, வாழ்வு ஒரு பிரச்னையல்ல ; அது ஒர் உலகம். ஆம் : பிறவி எனும் கடனைச் செய்து முடிக்க வேண்டிய மனிதாபிமானத்தின் கட்டுப்பாட்டுக்கு, வாழ்க்கை ஒர் ஆதார பீடமாக அமைகிறது : மனித மனம் இந்த வாழ்க்கைக்கு ஒர் ஆதார சுருதியாகக் குரல் கொடுக்கிறது.

இத்தகைய மானுட வாழ்க்கைக்கு உகந்த காலம் குறைவு. கனவுகளோ அதிகம்.

குறைவான இக்கால எல்லைக்குள்ளேதான், கூடுதலான கனவுகள் விளையாடுகின்றன ; விளையாட்டுக் காட்டுகின்றன. வாழ்க்கையோடு மனிதன் விளையாடுகிருன் ; மனித ளுேடு வாழ்க்கை விளையாடுகிறது :

இவ்விளையாட்டுக்கு ஒரு விதியை வரம்பறுத்துக் காட்டித் தீர்ப்பை வழங்கும் முதல் உரிமை பூண்டவன் அவன் - அலகிலா விளையாட்டுடையான் அவன். அவன் மனிதனுக்கு முதன் முதலாகக் காட்டும் காட்சிகள் இரண்டு : ஒன்று தாய். அடுத்தது : மண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/6&oldid=664130" இலிருந்து மீள்விக்கப்பட்டது