பக்கம்:தாய் மண்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கிறேன் நான். ஒர் ஆயிரம் வருஷம் வாழும் வாழ்வை மன மொத்த தம்பதிகள் ஒரு கணத்தில் வாழ்ந்து விட முடியாதா?-முடியும் என்பதுதான் என் சித்தாந்தம். ஏனென்றால், எங்கள் வாழ்வே அப்படி அமைந்துவிட்ட ஒரு கதைதானே?... குறிப்பாக, அவர் இறப்பதற்கு முந்தின இரவில் நாங்கள் அனுபவித்த இன்பமான அமைதிக்கு அளவே கிடையாது. அதுவேதான் கடைசி இரவென்று அவருக்கு உள்ளுணர்வு எதுவும் அறிவித்திருக்குமோ என்ன வோ?... ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தான் இப்படி நெஞ்சடைப்பினுல் அகால மரணம் அடைய நேருமென்பதைப் பற்றி அவர் முன் கூட்டியே கொஞ்சமேனும் சந்தேம் கொண் டிருந்தால், எனக்குரிய ஒரு முடிவையும் அவரே கட்டாயம் எனக்குச் சொல்லிக் காட்டியிருப்பார்!... எனக்குப் பூவும் மஞ்சளும் மீண்டும் கிடைக்கும் அளவுக்கு அவர் வழி வகுத் திருப்பார்...! அத்தகைய நல்ல மனமும் நல்ல பக்குவமும் கொண்டவர் என் கணவர்!... -

“ஆளுல், இன்றைய என் மனநிலை. இந்த மூன்று வருஷங் களாக நான் பூண்டிருந்த வைராக்கியத்துக்கு ஒரு சோதனை யாக அமைந்துவிட்டது. அந்தச் சோதனை எனக்கு நானுகவே இட்டுக் கொண்டதாக இருந்தாலும், அத்தகையதொரு திருப்பத்தைத் தன்வயப்படுத்திச் சிந்தித்து, எடைபோட்டு, முடிவுகட்டிவிடக் கூடிய மனவலு எனக்கு உண்டாகவில்லை என்றே நான் கருதுகிறேன். மனவலுக் குறை காரமணாக, தான் செக்ஸ் விஷயத்தில் சபலசித்தம் கொண்டுவிட்டிருப்ப தாக நீங்கள் தப்புக் கணக்குப் போட, அவசரப்பட்டுவிட மாட்டீர்கள் என்றும் நான் அறிவேன்.

‘எனக்கு என் மனம் காப்பு என்பதை நான் உணர்வேன். ஆளுல், என் மனத்திற்கு ஒரு காப்பு தேவைப்படுகிறது. இந்தக் காப்பு இருந்தால்தான், நான் நானக இருக்க முடியும் என்ற பயம் செறிந்த உண்மையும் என்னுள் விசுவரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது. ஆகவே, எனக்கு ஒர் ஆண் துணை தேவை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இம்முடிவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/61&oldid=664132" இலிருந்து மீள்விக்கப்பட்டது