பக்கம்:தாய் மண்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

என் அத்தான் கட்டாயம் மானசிகமாக ஆசீர்வதிப்பார் என்றே நம்புகிறேன். என் மனச்சாட்சியும் அவ்வாறே நம்பிக்கை கொள்கிறது!...... இதைப்பற்றி உங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன், டீச்சர்!......”

வர வர, கருதி இறங்கி விட்டது. சாவித்திரி பேச்சை நிறுத்தினுள். பெருமூச்சை நிறுத்தவில்லை. இப்போது, அவள் வெட்கமும் பயமும் கலந்த தோற்றத்துடன் விளங்கினுள். தலையை உயர்த்தினுள். முகத்தைத் துடைத்துக் கொண் டாள். தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.

  • தமிழரசி’ என்று கூப்பிட்டு, அவளைக் கூர்ந்து நோக்கினுள் சாவித்திரி. ஒரு கணம் அவள் அதிர்ச்சி அடைந் தாள்.

காரணம் இதுதான் :

தமிழரசி மாலைமாலையாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள்,

“தமிழரசி!... சகோதரி!...” -

நிதானமாகத் தலையை உயர்த்திப் பார்த்த தமிழரசி, பதனமாகச் சொன்னுள் : “ஒன்றுமில்லை. பயப்படாதீர்கள். ஒரு தர்மசங்கடமான பொறுப்பை என்னிடம் நீங்கள் சுமத் திaர்கள். அதற்கு விடை சொல்ல வேண்டாமா? அதற். காகத்தான் உங்கள் நிலையில் என்னை ஆட்படுத்திப் பார்த்தேன்! மிஞ்சியது இந்தக் கண்ணிர் மட்டும்தான், சகோதரி!...” -

நெற்றிப்பொட்டில் அறைபட்டாற் போலிருந்தது சாவித்திரிக்கு. . * -

அந்த அதிர்ச்சி நீங்குமுன், “ஹல்லோ சாவித்திரி’ என்று ஒய்யாரமாகக் கூவிக்கொண்டே திரையுலக நாகரிகப் பாணியில் வந்து நின்றாள் ஒருத்தி-மப்ளரும் மண்டையுமாக:

சாவித்திரி தன்நிலை பெற்றவளாகி, நிமிர்ந்தாள்.

“ஓ... வாங்க!’ என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/62&oldid=664133" இலிருந்து மீள்விக்கப்பட்டது