பக்கம்:தாய் மண்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

‘லிஸ்டர், இவங்கதான் பிரபல சினிமா ஸ்டார் நளின குமாரி! என்று தமிழரசியிடம் அந்த நட்சத்திரத்தை அறிமுகப்படுத்தினுள் சாவித்திரி.

நட்சத்திரத்துக்குக்கூட அறிமுகம் தேவையா என்று கோபம் கொண்டவள் போல, நவீன குமாரி கைவிரலால் நெற்றியில் எதையோ தேடினுள். ஒருவேளை, நெற்றிக் கண்ணேத்தான் வேைபாட்டுத் தேடினளோ? வலை தேடித் தான், பின் கொண்டை வலையை நாடினளோ? என்ன கர்மமோ?...

மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பது மாதிரி, அந்த நட்சத்திரத்தைப் பரிதாபமாகவும் அருவருப்புடனும் பார்த்தாள் தமிழரசி. அவள் உதட்டில் அணுவளவு சிரிப்பாவது மலரக் கூடாதோ? ஒஹோ’ என்று ஆணவ மாகத் தலையை ஆட்டிவிட்டு, காந்திஜியின் பக்கமாகத் திரும்பினுள்.

‘பாபுஜி!... உலகம் ரொம்பவும் விசித்திரமாக மாறிக் கொண்டு வருகிறதே!... கொண்ட கணவனேயே ரத்து’ செய்துவிட்டுத் திரிகிற இந்தப் பதிவிரதை'க்கும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திலே ஒரு அந்தஸ்து ஏற்பட்டுவிட்டதே!...” திரை நடிகை அங்கேயே நிற்கலாமா? அல்லது, நிற்கத் தான் ரசிக மகாஜனங்கள் அனுமதிப்பார்களா?

“நாம் புறப்படளாமா?’ என்று சினிமா வசன பாணியில் ளா'வுக்கு ஒர் அழுத்தம் கொடுத்துக் கேட்டாள் நளின குமாரி. பரவி வந்த இருளில் நட்சத்திரத்தின் முகமும் இருண்டு, அம்முகத்தில் இதுவரை தெரியாமல் இருந்த சுருக்கங்கள் இப்போது துல்லியமாகத் தெரியவும் ஆரம்பித்துவிட்டன. ஆகவேதான், அவள் அவ்வளவு தூரம் பதட்டப்பட்டாளோ, புறப்பட்டுவிட?

தமிழரசியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் சாவித்திரி, -

நடிகை மட்டும் அவளிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/63&oldid=664134" இலிருந்து மீள்விக்கப்பட்டது