பக்கம்:தாய் மண்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அதை ஒரு நல்ல சகுனமாக மதித்தாள் தமிழரசி, உள் ளுக்குள் விஷமத்தனமான புன்னகை வெடித்தது. எழுந்தாள். காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினுள், “என் மனத்தைக் காத்தருள், அண்ணலே!'- புறப்பட்டாள்.

அவள் புறப்பட வேண்டுமென்றுதான் நிலவு காத்தி ரூக்க வேண்டும்.

அவளுடன் நிலவும் புறப்பட்டது.

வாழ்க்கைக்கு ஒரு நிதர்சனத் தத்துவமாகப் பொங்கிப் புரண்டது ஆழி.

வாரி இறைக்கப்பட்ட கடற்கரைக் கிளிஞ்சல்கள் ஒளி கூட்ட விண்ணில் கூட்டுச் சேர்ந்தன போலும்!

அங்கங்கே மனிதர்கள் பல்வேறு வகைப்பட்ட பரிணுமத் திரிபுகளுடன் இயங்கி-அல்லது இயக்கப்பட்டுப் பொழுதை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

தமிழரசி நடந்தாள்.

உழைப்பாளிகள் சிலே வந்தது.

அம்பலவாணனே முதன் முதலாகச் சந்திக்க நேர்ந்த சம்பவத்தை எப்போதும் சுட்டிச் சொல்லும் நாட் குறிப்பல்லவா அவ்விடம்? .

அச்சம்பவத்தை எண்ணமிட்ட நெஞ்சு இனித்தது.

அவ்வினிப்புடனே, அவள் மறுகி நடந்தாள். நெடுஞ் சாலையைக் கடந்தாள். பல்கலைக் கழகக் கட்டடங்களின் “ஸ்டாப்பிங்'கில் நின்றாள். நின்றபடியே கண்களைத் திருப்பினள். தமிழ்த் தாத்தா'வை நோக்கி அவளது தமிழ் மணம் அஞ்சலி செய்தது! . மறுகணம், “தமிழரசி” என்னும் குரல் கேட்டுத்

திரும்பிப் பார்த்தாள். - .

அவள் காலடியில் அவளது சிநேகிதி சுடர்க்கொடியின் ரோஜா நிறக் கார் நின்றது. - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/64&oldid=664135" இலிருந்து மீள்விக்கப்பட்டது