பக்கம்:தாய் மண்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

உற்ற தோழியின் வேண்டுகோளுக்கு இணங்கி, காரின் ஆசனத்தில் ஏறி அமர்ந்தாள் தமிழரசி.

சுடர்க்கொடி காரைச் செலுத்தினுள். தமிழரசி தற்செயலாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் நெஞ்சம் திடுக்கிட்டது. - அங்கே, பின் ஆசனத்தில் அம்பலவாணன் மலர்ந்த

மூகத்துடன் உட்கார்ந்திருந்தான்.

முக்கோணமும் காதலும்

@

அம்பலவாணன், சுடர்க்கொடி, தமிழரசி ஆகிய மூவரும் நைனியப்பன் தெருவில் இருந்த தமிழரசியின் வீட்டில் வந்து இறங்கும் வரைக்கும் பேச்சு மூச்சுக் காட்டவில்லை.

காரை நிறுத்தினுள் சுடர்க்கொடி. தமிழரசி உடனே கதவை அழுத்தித் திறந்துகொண்டு முதலில் இறங்கினுள். அதே சமயம் அம்பலவாணனும் இறங்கியதைக் கண்டாள்.

மிதத்துரிதமாகச் சாவியைக் கையிலெடுத்து வீட்டைத் திறந்தாள். விளக்குப் பொத்தானை அழுத்தினுள். “வாங்க!’ என்று அம்பலவாணனக் குளிர்ந்த நகை ஏந்தி வரவேற்றாள். பிறகு, ‘வா, சுடர்க்கொடி’ என்று உபசரித்தாள்.

பிரம்பு நாற்காலிகளில் இருவரும் தள்ளித் தள்ளி உட்கார்ந்தார்கள். .

புத்தர்சிலே வைக்கப்பட்டிருந்த மேஜையில் இருந்த ஊது வத்திக் குமிழில் புதிய ஊதுவத்திகள் சிலவற்றைப் பொருத்தி -ஞள்; பிறகு, அவற்றில் தீயைப் பொருத்தினுள். சுகந்தம் இழை பின்னத் தொடங்கியது. - “நான் இங்கே வர்றது. இதுதான் முதல் தடவை’

என்று மின்விளக்கின் நகையில், தன்னுடைய அழகிய உதடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/65&oldid=664136" இலிருந்து மீள்விக்கப்பட்டது