பக்கம்:தாய் மண்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

களின் நகையையும் இணைத்தவனுக, பேச்சைத் தொடங் கின்ை அம்பலவாணன். டெரிலின் ஸ்லாக்கு’க்கும் அவன் செளந்தர்யத்துக்கும் இணைந்த பொருத்தமே பொருத்தம் :

கைகளைக் கட்டிக்கொண்டு லேசாகத் தலையைத் தாழ்த் தியவளாக ஏதோ சிந்தனை வசப்பட்டிருந்த தமிழரசி, அவன் பேச்சைக் கேட்டுத் தலையை உயர்த்தி, ஆமாங்க’ என்று ஒப்புக்கொண்டாள். செவ்வந்திப்பூக்களின் காம்புகளை விரல் களாக்கிக் கொண்டிருந்த அவள், அவ்விரல்களை நிமிண்டி'க் கொண்டிருந்தாள். நெற்றியைத் தடவிக்கொள்ளவும் அவை உதவின.

அம்பலவாணனின் பேச்சு தமிழரசியின் இதயத்தை என்னவோ செய்தது. அதைச் சர்வசாதாரணமான நடை முறைப் பேச்சாகக் கொள்ளமுடியவில்லை. அவளால். ‘நான் இங்கு வரும்போது மிகவும் சந்தோஷமாக வரவேண்டு மென்று களுக் கண்டேனே!’ என்று சொல்லாமல்-சொல் வதற்குப் பதிலாக, “நான் இங்கே வர்றது இதுதான் முதல் தடவை என்று சொல்லுவது மாதிரி அப்பேச்சை அவள் உணரலாள்ை. தன் தோழியிடம் கொடுத்துத் தபாலில் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதம் கட்டாயம் அம்பலவாணனின் கைக்குக் கிடைத்திருக்க வேண்டுமென்பதை அவள் தீர்க்க மாக அனுமானம் செய்தாள். தான் அளித்த ஏமாற்றத்தின் சோகம் தன்னைத் திரும்பிக் கவ்விக் கொண்டதை அவள் இந்தச் சில நாழிகைகளிலே பலமுறை அனுபவித்தது உண்மை தான். நெருப்பின்மீது நிற்பதுபோல இருந்தது அவளுக்கு. அவள் முகத்தில் கலக்கம், சோகம், ஆற்றாமை ஆகிய உணர்ச்சி கள் இழை பின்னின. இனி அங்குத் தாமதித்தால், கண்ணிர் தாமதிக்காது என்று அவள் புரிந்துகொண்டாள். ஒகுக் களித்து இருந்த வெளிப்புறக் கதவை இடித்துக்கொண்டு வெளிப்புறம் சென்றாள். சற்றுப் பொறுத்து அவள் திரும்பிய போது, அவளது வதனம் தெளிவாகக் காணப்பட்டது.

‘உட்காருங்க’ என்று வீட்டுக்கு உடையவளேயே உப. சரித்தாள் சுடர்க்கொடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/66&oldid=664137" இலிருந்து மீள்விக்கப்பட்டது