பக்கம்:தாய் மண்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

தமிழரசிக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைக் கூப்பிடும் குரல் கேட்டு, தமிழரசி திரும்பவும்: வெளிப்புறம் போய்த் திரும்பினள்; தூக்குச் சட்டியைத் தூக்கிவந்தாள். நிரம்பப் பால் இருந்தது. “இதோ, வந்திட் டேன்!’ என்று சொல்லி உள்ளே சமையற்கட்டுக்குச் சென்றாள்.

காபி அற்புதமாக மனத்தது. “சாப்பிடுங்க!’ என்று கூறி, ஒரு குவளைக் காபியை அம்பலவாணனின் கையில் கொடுத்தாள். கவனமாக அவன் வாங்கிக்கொண்டான். இருதரப்பு விரல்களும் உரசி விலகின.

‘சாப்பிடு, சுடர்க்கொடி!’ சுடர்க்கொடி அவளாகவே முக்காலியில் இருந்த மற்றாெரு தம்ளரை எடுத்துக் கொண்டாள்.

‘உங்களுக்குக் காபி...?’ என்று கேட்டான் அம்பல வாணன், வாயருகே காபியைக் கொண்டு போனவன். சடக்கென்று நிறுத்தின்ை.

“எனக்கு வேண்டாம். இப்போது காபி குடித்தால் ராத்தூக்கம் கெட்டுவிடும்!’ என்று சமாதானம் படித்தாள், படித்துக்கொடுக்கும் ஆசிரியை. வளரும் இந்தியா’ அவள் பிடிக்குள் இருந்தது.

‘நீங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கலாமா?’ என்று சொல்லி, காலியாக இருந்த ஒர் எவர்சில்வர் டபராவை எட்டி எடுத்து, அதில் செம்பாதியை ஊற்றித் தமிழரசியிடம் கொடுத்தான் அம்பலவாணன்.

அவனையே இமைக்காமல்-சிரிக்காமல் பார்த்தாள் சுடர்க்கொடி.

ஏக காலத்தில் மூன்று ஜோடி உதடுகளும் நப்புக் கொட்டி முடித்தன.

டபரா தம்ளர்களை ஒதுங்க வைத்துவிட்டு வந்து அமர்ந் தாள் தமிழரசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/67&oldid=664138" இலிருந்து மீள்விக்கப்பட்டது