பக்கம்:தாய் மண்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அம்பலவாணன் அறையைச் சுற்றிக் கண்களை அலைய விட்டான்.

“வானம் புவி புகழ் மன்னன் இருந்தான்!

நேருஜியுடன் காந்திஜி உரையாடிக் கொண்டிருந்த மங் கலக் காட்சிக்கு, மலர்மாலை அஞ்சலி செலுத்திக் கொண் டிருந்தது.

கீழ்த்திசையில் புத்தக அலமாரிகள் இருந்தன.

மேற்புறச் சுவரில் நற்சாட்சிப் பத்திரங்கள் சில பத்திர மாகக் கண்ணுடிச் சட்டங்களுக்கு மத்தியில் இலங்கின.

ஒரு பகுதியில் கண்ணுடி பீரோ, அதில் அவளுக்குரிய துணிமணிகள் அணிபெறத் திகழ்ந்தன. .

அவன் எல்லாவற்றையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த சுடர்க்கொடி, “நான் இங்கே நிறையத் தரம் வந்திருக்கேன், அத்தான்!” என்று உட் பொருள் வைத்துச் சொல்லிவிட்டு, அடுத்த கணம், எதையோ மறந்து, பின் நினைவூட்டிக்கொண்டவள் போல் தடுமாறி முடிந்ததும், “தமிழரசி, நான் சொன்னேனே என் அத்தானைப் பற்றி, அவர் இவர்தான்!” என்று அம்பலவாணனச் சுட்டிக் காட்டிச் சொன்னுள். சுட்டும் விழிச்சுடர்கள் பிரகாசித்தன. தங்கக் கழுத்தில் தங்கப் பூச்சரம் அழகுக்கு அழகானது.

“அப்படியா? நீ ஒட்டி வந்த காரிலே இவங்களைக் கண்டதுமே எனக்குப் புரிஞ்சுட்டுது, சுடர்க்கொடி’ என்றாள் தமிழரசி, அதரங்களில் கவர்ச்சி கசிந்தது. .

சுடர்க்கொடி, “ஓஹோ என்று இழுத்தாள். தமாஷாக, - .

சிகரெட் டப்பாவை எடுத்துக் கொண்டான் அம்பல வாணன். பாண்ட் சமன் ஆனது. --

தமிழரசி இருப்புக்கொள்ளாமல் தவித்தாள். srit

கடிதத்தைத் திருவாளர் அம்பலவாணன் பார்த்திருப்பாரா? பார்த்திருந்தால், என்னுடைய முடிவின் மூலம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/68&oldid=664139" இலிருந்து மீள்விக்கப்பட்டது