பக்கம்:தாய் மண்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

தோழிக்கு-என்னுடைய உடன் பிறவாச் சகோதரிக்கு ஒரு. சிக்கல் தீர்ந்து, அவளுடைய காதல் பாதை தெளிவாகிவிட. ஏதுவாகிவிடுமல்லவா? நான் கொடுத்த தபாலை ஒரு கால் அவன் பார்த்து, அதிலிருந்த விலாசத்தைப் படித்துவிட்டு, அதன் மூலம் என்னை அவள் மனத்திற்குள் சபித்தாலும் சபித் திருக்கலாமே! எப்படியோ என் கடமையை-எனக்கு நானே செய்து கொண்டாக வேண்டிய ஒரு பொறுப்பை வெகு யதார்த்தமாகச் செய்து முடித்துவிட்டதாகவேதான் நான் நினைக்கிறேன். மனம் என்றால் அதற்கென்று ஆசா பாசங்கள் ஆயிரம் இருக்கும். இதற்கு என்னுடைய இந்தக் கன்னி மனமும் விலக்கல்ல! ஆனால், அத்தகைய எனது ஆசா பாசங்களுக்காக எனது மனத்தீர்ப்பை நான் புறக்கணிக்க முடியுமா? ஒரு நிமிஷத்திற்குள் ஒரு யுகம் நடந்து மீண்டு விட்டதோ?

தமிழரசி நெடுமூச்சை ஒசைப் படுத்தாமல் வெளியேற்றி ளுள். தன் தோழியையும் அம்பலவாணனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்கள் இருவரது நெற்றித் திடல்களிலும் விளுக்குறிகள் வளையமிட்டு இருப்பதாக அவளுக்குத் தோன்றி யது. ஹிட்ச்காக் படத்தில் எதிர்பாராத பயங்கரத் திருப் பத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதற்கு நேராக, அப் பொழுது, தமிழரசி இருந்தாள். அம்பலவாணனே முதலில் சந்திக்க நேர்ந்த அந்நிகழ்ச்சி அடிக்கடி அவள் கண்களுக்குள் நிழலாடி நின்றது. -

“விஸ்டர்” என்று மெளனத்தைக் கலைத் தான். சுடர்க்கொடி.

‘சொல்லு, சகோதரி!’ என்றாள் தமிழரசி. அவள் நெஞ்சு அடித்துக் கொள்ளத் தொடங்கியது. சகோதரி” என்னும் அழைப்பில் பாசம் இனித்தது. - .

‘உங்க லெட்டரை அத்தான் பார்த்தாச்சு!” என்றாள் சுடர்க்கொடி. சொல்லித் தீரவேண்டியதைச் சொல்லிவிட்ட பாவத்தை, ஏந்திழையின் வதனம் ஏந்தியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/69&oldid=664140" இலிருந்து மீள்விக்கப்பட்டது