பக்கம்:தாய் மண்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

தாயும் மண்ணும் ஒரே மரபுக்குச் சொந்தம். ஒரே நிலைப்பட்ட தியாகத்தின் பாரம்பர்யத்துக்கு ஒரு வரலாறு நல்கும் பண்புகொண்ட சித்தாந்தங்கள் இவை இரண்டும். இவை இல்லையேல், தத்துவம் இல்லை :

மனம் என்பதே ஒரு தத்துவம்தான். அது ஆண்டவனின் அருட்கொடை. கொடை சிறக்க-கொடைத் தன்மை நிறக்க இந்த மனம் ஓர் உன்னதம் ஆக வேண்டும்.

உன்னதத்தின் ஒளிப்புள்ளிகள் நாடும் வீடும் ! அவை இன்றுவரை சொன்ன கதைகள் ஒன்றா, இரண்டா ?

உண்மைதான் t - கதை இல்லையேல், கடவுள் இல்லை ! ஆகவேதான், நானும் ஒரு கதை சொல்லத் தொடங்கு கிறேன். இவ்வகையில், நானும் ஒரு சிருஷ்டிகர்த்தா !

எனவேதான், இலக்கியப் பண்பாடு செழித்த என் னுடைய மனேதர்மச் சுயப்பிரக்ஞையில் விளைந்த சொக்கப் பச்சையாகத் திகழ்கின்றாள் என்னுடைய தமிழரசி. அவள் என் கண்ணிருக்குச் சொந்தம். எனக்குரிய கனவின் பத்தமும் அவளே. எனக்குகந்த பாசத்தின் நிதி அவள் : என் யுகத்தின் நீதியும் அவளேதான்!

தமிழ்ச் சமுதாயத்தின் நடைமுறை வாழ்க்கைக்கு அவள் ஒர் எடுத்துக் காட்டு, அவளுடைய கதை ஒரு பிரச்னை. அவள் கொண்ட இலட்சியம் ஒரு சாதனை. அவளது தேசப் பற்று ஒரு நீதி ; அவள் காதல் ஒரு நிறை அவனது முடிவு ஒரு விதி. அவள் விதி ஒரு சிருஷ்டி. ஆம் : அவள், விதியின் நாயகி ; விதிக்கு நாயகி.

விளையாடுகிருள், விளையாடிக்கொண்டே இருக்கிருள்விதியோடு, வினையோடு, வினை தீர்த்தாைேடு !

அவள் செளபாக்கியவதி. சுகந்தத்தின் நித்தியமல்லி அவள். புனிதத்தின் பாரிஜாதம் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/7&oldid=664141" இலிருந்து மீள்விக்கப்பட்டது