பக்கம்:தாய் மண்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழரசி இதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல என்ன இருக்கிறது? பேசாமல் அவள் அம்பலவாண

னின் பக்கம் பார்த்தாள்.

சுடர்க்கொடி தன் சிநேகிதியின் சார்பாக நாற்காலியை நெருக்கிப் போட்டுக் கொண்டாள். ‘என்ன பேசலேயே,

தமிழரசி?’ என்று கேட்டாள்.

“நீதான் பேசுறியே சுடர்!” “ஆமாம், நான்தான் பேசுகிறேன். நானேதான் பேசவும் வேணும். எஸ்... இட் இஸ் அப்ஸல்யூட்லி கரெக்ட்!” - என்று ஒரு மூச்சுப் பேசி முடித்துவிட்டு, ஓர் இடைவெளி கொடுத்தாள் சுடர்க்கொடி. பிற்பாடு, மறுபடி தொடரலாஞள் :

“தமிழரசி, இதுவரை நான் பேசினேன். இப்போது, என் இதயம் பேசப் போகிறது. இவர்கள் என் செள்ந்த அத்தான்-முறை அத்தான். ஆகவே, முறைப்படி எனக் குள்ள உரிமையின் பேரில்-நானும் அவரும் திருச்சியில் ஒன்றா ய் உண்டு, ஒன்றாய் ஆடிப் பாடித் திரிந்த அந்த அறியாப் பிராயத்துச் சம்பவங்கள் வளர்த்துக் கொடுத்த அந்தப் பாசத்தின் உறவின் பேரில், நான் என் அத்தானத் தான் ம ன ப்யூர் வ. மா. க க் காதலித்து வந்தேன். அவர் நினைவு என்னுள் சொர்க்கத்தை உருவாக்கியது; அவர் அன்பு என்னுள் புதிய உலகத்தை உண்டாக்கியது; அவர் உள்ளம் என்னைப் புதிய சுடர்க் கொடியாகப் பிறப்பித்தது. இத்தகைய விந்தைகள், என்னுள் காதலெனும் பவித்திரமான சக்தியைத் தோற்றுவித்தன. நான் என் அத்தானை மண மேடையில் சந்திக்கப்போகும் புனித நந்நாளுக்காகத் தவம் இருந்தேன்.

‘அது தருணம்தான், அதாவது, நேற்றுத்தான்எழும்பூரில் ரெயிலுக்காகக் காத்திருக்கையில்தான்-அவர் உங்களது அன்புக் காதலுக்குத் தவம் இருப்பதாகச் சொன்ஞர். உங்கள் கடிதத்தைப் போஸ்ட் செய்ய வேண்டு மென்றிருந்த நான், ஏதோ ஒரு கவனத்தில் கவரில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/70&oldid=664142" இலிருந்து மீள்விக்கப்பட்டது