பக்கம்:தாய் மண்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

விலாசத்தைப் பார்த்தேன். அத்தானுக்குரிய தபால் என்று புரிந்தது எனக்கு. ஆகவே, அதை அவரிடமே நேரில் சேர்ப்பித்தேன். கடிதத்தைப் படித்த என் அத்தான் கண் கலங்கினர். என் அத்தானின் விழிகளைத் துடைத்தேன். என் விழிகளேத் துடைத்துப் பழகிய என் ஆருயிர் அத்தானுக் கான கடமையைச் செய்ய வேண்டியவள் நான். ஆம்; இப்போதும் நான் என் கடமையைச் செய்தாக வேண்டும்!...

‘உங்களைத் தேடிக்கொண்டு இதற்கு முந்தி ஒரு தவணை இங்கு வந்து திரும்பினேன். தேடிப்போன மூலிகை காலில் சிக்கிய கதையாக, உங்களை வழியில் பார்த்தேன். துப்பறியும் கதையில் வருகிற ஸ்ஸ்பென்ஸ் போல, உங்களைக் காரில் ஏறச் சொல்லிவிட்டு, என் அத்தான் பின் சீட்டில் இருப்பதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமலே இருந்துவிட்டேன். இதற்காக, நீங்கள் நாளைக்குத் தனிமையில் என்னைக் கோபிப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

“சரி, நேரமாகிறது. என் கடமைக்கு வருகிறேன். விஸ்டர் இந்த அறையில் ஒர் அழகிய-உணர்ச்சி மிகுந்தநூதனமான முக்கோணக் காதல் கதை நடந்து கொண்டிருக் கிறது. இந்த முக்கோணக் காதலில் ஒரு கதாநாயகன்! ஆனல், இரண்டு நாயகிகள்! இல்லேயா?... பெரும் சிக்கல் தான்! ஆனால், என்னல் இதற்குத் தீர்வு காண முடியும்! என் அன்புக்குரிய அருமை அத்தானே நீங்கள் சிரிக்கச் செய்தால், நான் சத்தியமாக ஆனந்தக் கண்ணிர் சொரிவேன், அக்கா! உங்கள் தங்கையின் உயிரான வேண்டுகோளை நீங்கள் நிறைவேற்றுங்கள். இல்லாவிட்டால் என் அத்தானுடன் நானும் சேர்ந்து அழவேண்டியதுதான்!...”

சுடர்க்கொடி சிறுமியாகச் செருமினுள். கைகளே நடுக்கத் துடன் விரித்து, “அக்கா!’ என்று தமிழரசியின் கைகளைப் பற்றிக் கெஞ்சிள்ை. -

தீக்குள் விரலை வைத்தவளாகத் துடித்தாள் தமிழரசி, அவளது நயனச் செம்புகள் ததும்பின. “சுடர். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/71&oldid=664143" இலிருந்து மீள்விக்கப்பட்டது