பக்கம்:தாய் மண்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அஞதையை ஏனம்மா சோதிக்கிறாய்?’ என்று விசும்பிளுள். அவளது கண்ணிரையும் விலக்கினுள்.

சுடர்க்கொடி தன்னுடைய வில்க் புடவையின் முகத் தலைப்பைத் தமிழரசியின் முகத் தலைப்புக்கு நீட்டி அவளது விழிநீரைத் துடைத்தாள். நீங்க அளுதையா? பார் சொன்னது? நாங்களல்லவா இப்டோ அைைதயாட்டம் தவிச்சிட்டிருக்கோம், உங்க ஜட்ஜ்மெண்டுக்காக!...” என்று. மொழிந்தாள். நீங்கதான் எங்களைச் சோதிக்காமல் இருக்கவேணும்!”

தமிழரசி விரக்தியுடன் இதழ்களைப் பிரித்தாள். அம்பலவாணின் திசைக்கே அவள் திரும்பப் பயந்தாள். “நான் தெய்வமல்லவே உங்களைச் சோதிப்பதற்கு!’ என்று வறட்சியாகப் புன்னகை செய்தாள். நெற்றிப்பொட்டு செழிப்பமாக இருந்தது. -

‘வரம் கொடுக்க வேண்டிய நிலைமையிலே நீங்க இருக். கீங்க. அப்புறம் என்ன? தெய்வமாக இருக்க ஒப்பலைன்னு, ஆல்ரைட்! நீங்க எங்களுக்குச் சாதகமான நல்ல வரத்தைக் கொடுத்திடுங்க, போதும்!...” என்று வாய்விட்டுச் சிரித்தாள் சுடர்க்கொடி. மூக்குத்திக் கற்களில் சிரிப்பின் அலைகள் பிரதி பலிப்புச் செய்தன.

தமிழரசி துவண்டாள். உயிர்ப்புச்சத்து முழுவதும் வடிந்துவிட்டதோ என்னும்படியாக அவள் துவண்டாள். தமிழ்க் கடவுளைத் தியானம் செய்தாள். அன்பின் அண்ணலைப் பார்த்தாள்; ஆசிய ஜோதியை நாடினுள்; புனித. வள்ளல் புத்தர்பிரானைத் தரிசித்தாள்.

கணங்கள் சில பேய்க் கணங்களாக முழங்கி மறைந்தன. வீதியில் சீன வெடிகள் அலறின.

தமிழரசி கண்களைத் திறந்தாள். “சகோதரி! உன் அத்தானை உன்னுடைய அத்தானகவே ஆக்கிக்கொள்ள முயற்சி செய். முயன்றால் முடியும். இதுவே, நான் உன்னிடம் வேண்டும் வரம்!,. இதுவே நான் உனக்குச் செய்ய:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/72&oldid=664144" இலிருந்து மீள்விக்கப்பட்டது