பக்கம்:தாய் மண்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

வேண்டிய மனிதப் பண்புமிக்க கடமையாக எனக்குத் தோன்றுகிறது என் மனச்சாட்சி அப்போதுதான் என்னை வாழ்த்தும். இம்முடிவுதான் உலக வழக்கிற்குப் பொருத்த மாகவும் தோன்றும்! என்னைப் பெரு மனம் கொண்டு மன்னித்துவிடு, சகோதரி!’ என்று முத்தாய்ப்பு வைத்துச் சொல்லி, அவளைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

கால மழை பெய்து அமர்ந்தது.

சிகரெட்டுப் புகைச் சுருள்கள் அந்த அறையிலிருந்து இப்போது பூரணமாக மறைந்துவிட்டன!

புலன் விசாரணை

எட்டு

‘வாம்மா, வா!’ என்று இதயத்து அன்பு முழு வதையும் சொற்களிலும் உதடுகளிலும் நிரப்பி, தமிழரசியை வரவேற்றாள்; பெற்றதாய் தன் மகளே வரவேற்பது போன்று வரவேற்றாள், கஸ்துாரி அன்னை இல்லத்தின் தலைவி திலகவதி அம்மையார். அவள் நெற்றியில் கஸ்தூரித் திலகம் மணத்தது! -

தமிழரசி அன்பாக இளநகை சிந்திக்கொண்டே உள்ளே படியேறினுள், புனிதமான அழகின் பேரொளியோடு. சாந்துப்பிறை வெகு அமைப்பு.

பார்வையாளர்கள் கூடத்தில் அவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள்.

அழைப்பு மணியை அழுத்தினுள் தலைவி. ஒடி வந்த ஆயாள் மரியாதையுடன் நின்றாள். “ஒவல் இரண்டு கொண்டு வாங்கம்மா! எங்க தமிழரசிக்கு ஒவல்ஞ ரொம்பப் பிரியம்!’ என்றாள். காற்று கலைத்த வெள்ளை முடிகளைத் “தனது பண்ணினுள் தலைவி.

தா. ம. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/73&oldid=664145" இலிருந்து மீள்விக்கப்பட்டது