பக்கம்:தாய் மண்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அம்மையாரிடம் அன்புக்குப் பஞ்சமேது?-அது சொல் லிச் சொல்லி வழிந்தது. அந்த அன்புதானே அவளுக்கு வாழ்வு: மெய்: அன்பின் ஆன்மாதான் வாழ்வு-தலைவியின் வாழ்வு! -

ஆயா கொணர்ந்த கோப்பைகளைத் தமிழரசி எழுந்து வாங்கி, ஒன்றை மிகுந்த பணிவுடன் தலைவியிடம் சமர்ப்பித் தாள். “சாப்பிடுங்க மதர்!’ என்றாள்.

வாங்கிக்கொண்ட அம்மையார், “உட்கார்ந்து நீயும் சாப்பிடம்மா!’ என்று உபசாரம் செய்து ஒவலைச் சுவைக்க லாளுள். இதழ்கள் குவிந்து விரிந்தன. கழுத்தில் இழைந்த சன்னச் சங்கிலி ஒளி கக்கியது. நெற்றிக் குங்குமம் துலாம் பரம். -

உச்சி விசிறி ஒய்யாரமாக ஊர்ந்தது. ஊர்ந்த கதிர் மணிகளில் சூடு ஊர்ந்தது. சுழல் அழமாரி சுழன்றது. கைக்கு வந்ததை எடுத்தாள் தமிழரசி, “அமெரிக்காவில் நேரு என்ற ஆங்கில அனுபந்தம் அது. புரட்டினுள். அதன் ஏடுகளைப் புரட்டியதுபோது, அவள் தன் மன ஏடுகளையும் புரட்டிக் கொண்டாள்.

விவரம் புரிந்த நாள் தொட்டு அவள் மண் தொட்டு விளையாடி, மனம் தொட்டுச் சிரித்து மகிழ்ந்திடச் செய்த புனிதமான புண்ணியத்தலம் ஆயிற்றே இந்த இல்லம்!

ஈன்ற தாய் தந்தையர்களை இழந்த அனதைச் சிறுவர்சிறுமியர்களுக்குத் தந்தையாகவும் தாயாகவும் விளங்க ஓர் அன்னையைக் கொடுத்த அந்த இல்லம் அவளுக்கும் நிழல் தந்து, அன்பு தந்து, அங்கு ஒர் உன்னதமான உலகத்தையும் தந்தது. “மதர். மதர்!” என்ற பாசக்குரல்கள் சதா ஆர்ப் பரித்தன! -

அன்னையின் முகம் அறியாள்; தந்தையின் முகம் அறியாள். அப்படிப்பட்ட துர்ப்பாக்கியவதிக்கு, பாக்கியங்களின் கூட்டு றவுப் புள்ளியாக விளங்கிய திலகவதி அம்மைதான் அவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/74&oldid=664146" இலிருந்து மீள்விக்கப்பட்டது