பக்கம்:தாய் மண்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

“அம்மா ஆளுள். அம்மையும் அப்பனும் ஆனுள்; தெய்வத் தைப்போல. ஆமாம், தெய்வத்தைப் போலத்தான்!

தமிழரசி தன்னைப்பற்றிச் சிந்திக்கும் தருணங்களிலெல் லாம் அவளுக்குத் தன் பிறப்பின் புதிர் பற்றிய சிந்தனையும் கூடவே ஒட்டிவரும். ஒட்டியிருக்கும் அமைதி அப்போது வெட்டியோடும். நான் யார்? தத்துவ விசாரப் பாவனையில் அவள் தன்னைத் தானே-தனக்குத் தானே கேட்டுக் கொள் வாள். இதற்கு விடை சொல்லத் தெரிந்தவன் ஒருவன்’ தான் உண்டு!...

ஆணுல், அவளோ, இத்தனை நாளும் இல்லாத திருநாளாக இப்போது தன் பிறப்பின் அந்தரங்கம் பற்றித் திலகவதி அம்மையாருக்கு ஏதாவது விவரம் தெரியுமா என்று கேட்டு விடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தாள். விவரம் புரிந்த நாட்களிலே எப்போதாவது இப்படியொரு மனச் சபலம் கிளர்ந்தெழுந்து புரட்சி பண்ணுவது உண்டு. அப்போதெல்லாம், என்னைப் பெற்றவர்களே அனுதை என்ற பட்டத்தை எனக்குச் சூட்டிவிட்டு என்னைப் பற்றிக் கவலைப் படாமல் மறைந்துவிட்ட பிறகு-அல்லது, தங்களே மறைத்துக் கொண்டு விட்டபிறகு, அவர்களைப் பற்றிப் பெரிதாக நான் மட்டும் எதற்காகக் கவலை கொள்ள வேண்டும்?’ என்று சமா தானத்தைக் கற்பித்து, தன் கன்னி உள்ளத்துக்கு ஒரு போக்குக் காட்டித் தப்பித்துக் கொள்வது என்னவோ வாஸ்த வம்தான். ஆனால், வேறு சில தருணங்களிலோ, அவள் விபரீதமாக முடிவுகட்ட முனைவதும் உண்டு. ஒரு வேளை தகாத காதலின் விளைவால் நான் பிறந்திருப்பேனே? அப்படித் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், என் பெற்றாேர் கள் என்னை ஏன் இப்படி நடுத்தெருவில் போட்டுவிட்டு போகப் போகிறார்கள்?...’ என்று அவள் நினைத்து ஆராய்ந்து பார்க்கையில், அவளுக்கு நெஞ்சமே வெடித்துச் சிதறி விடும் போல ஆகிவிடும். தனியே அழுது புலம்புவாள். மனத்தின் துன்ப வெறி தனியும்போது, எது எப்படி ஆலுைம், என் பெற்றாேர்களை நான் கண்ணை மூடுவதற்குள் ஒரு முறையாகி லும் தரிசித்துவிட வேண்டும். ஆம்: இன்று சமுதாயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/75&oldid=664147" இலிருந்து மீள்விக்கப்பட்டது