பக்கம்:தாய் மண்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ஓர் அந்தஸ்துப் பெற்றிருக்கும் என்னை மகளாகப் பெற்ற பெற்றாேர்களே-அவர்கள் தெய்வாதீனத்தால் உயிருடன் இருந்தால்-தேடிக் கண்டு பிடித்துவிட வேண்டும். அலகிலா விளையாட்டுடைய ஐயன் மனம் வைத்தால் நாளேக்கு என் தாய் தந்தையை என் முகத்துக்கு நேரே காட்டிவிட மாட் டாளு?... ஈஸ்வரா!... செந்தில் குமரா!...” என்று சிந்திப்பாள். இறந்த காலத்தின் துன்பத்துக்கு ஆறுதல் சொல்லும் எதிர் காலத்தின் மனக்கனவு.

சர்ச் மணி கணிரென்று கேட்டது. தமிழரசி சுயப்பிரக்ஞை அடைந்தாள். தலைவி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள்” மூளை மரத்துவிட்டாற் போலிருக்கவே, தமிழரசி எழுந் தாள். சுவரில் கொட்டை எழுத்துக்களிலே பொறிக்கப் பட்டிருந்த வாசகங்களை உன்னிப்பாகப் பார்த்தாள். ‘தெய் வத்தின் முன்னே நாம் யாரும் அனதைகளல்ல. ஆண்டவன் தான் நமக்கு அம்மையும் அப்பனும் நாம் பிறந்து விட்டோ மென்றால், அதற்கு ஓர் அர்த்தம் கடவுளால் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். அதுதான் சிருஷ்டி ரகசியம். ஆகவே, நாம் நம் பிறப்பைப் பற்றி ஆராயாமல், நம் பிறப்பின் கடமையைச் செயற்படுத்துவதில் கருத்துச் செலுத்த வேண் டும். இதுவேதான், வாழ்க்கையின் மகத்தான உண்மையு. மாகும்?’

இல்லத்தின் ஒவ்வொரு விழாவிலும் தலைவி வழங்கிய அறிவுரை அல்லவா இது? w

தன்னுள் சிலிர்த்தெழுந்து தென்பு ஊட்டிய அமைதியின் நிறைவில் அவள் தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்றாள்.

“என்னம்மா, உன் முகம் தீவிரமான சிந்தன வசப்பட்டி ருக்கே?’ என்று விசாரித்துக் கொண்டே வந்து ஆசனத்தில் அமர்ந்தாள் திலகவதி. பூத்திரைகளே ஊடுருவிப் பாய்ந்தது, கடலேத் தழுவி வந்த இளங்காற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/76&oldid=664148" இலிருந்து மீள்விக்கப்பட்டது