பக்கம்:தாய் மண்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

தமிழரசி தலைவியை ஏக்கத்துடன் பார்த்தாள்."என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், அம்மா!... நான் அனதை என்கிற நினைவு என்ன அரித்தெடுக்கிறது. என்னைப் பெற்றவர்களேப்பற்றிக் கடைசி வரையிலும் உங்களுக்கு ஒரு விவரமுமே தெரியாதா, மதர்?’ என்று பரிதாபமான நைந்த குரலில் வினவினுள் அவள்.

e ;

தமிழரசியின் நொந்த பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டாள் திலகவதி, தமிழரசியை நெருங்கி அவள் தோளைத் தொட்டுத் தடவிக் கொடுத்தாள். அவளை நாற்காலியில் அமர்த்தினுள் இமை வட்டங்களில் பொடித்திருந்த கண்ணிர்ச் சிதறல்களே விலக்கினுள். ‘என்னம்மா, சொன்னே? நீ அனுதையா?... நீ அளுதை என்றா உனக்கு உன் மனம் சொல்லிக் காட்டு கிறது? அப்படியென்றால், உன்மீது பாசம் சொரிந்த நான்கூட அர்த்தமற்ற ஒரு ஜடமாகவா உனக்குத் தோன்றி விட்டேன்?... அம்மா! அம்மா!’ என்று நீ என்னிடம் பாசம் .ெ கா ன் டி ரு ந் த .ெ த ல் லா ம் வெறும் பொய் தான? என் கனவுகள்-கொள்கைகள்-கடமைகள்-லட்சி யங்கள் அனைத்துமே பாழ் என்றா நிரூபித்து நிற்கிறாய்? சொல்லம்மா தமிழரசி, சொல்!...” என்று கேட்டாள்.

திலகவதி அம்மையின் முகம் உணர்ச்சிச் சுழிப்பில் சிவந்தது. மூக்கின் முனை சிவந்தது. வெளுப்புத் தட்டி யிருந்த உதடுகள் செருமலை மூடிக் கொண்டன. துடிதுடித்த இமைகளால் ஈரத்தை மூடிக்கொள்ள முடியவில்லை.

அன்னையை ஏறிட்டுப் பார்த்த தமிழரசி அஞ்சி விட்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டே, ‘தெய்வம் கண்கலங்கக் கூடாதுங்க. உலகம் பொறுக்காது இந்தப் பாவத்தை!... என்னை மன்னித்துவிடுங்கம்மா, மன்னித்துவிடுங்க!’ என்று கெஞ்சியவாறு, தலைவியின் பாதங்களைத் தொட்டு வணங்கினுள். கழுத்துச் சங்கிலி ஊசலாடியது. அன்னை திலகவதி அம்மையின் அன்புப் பரிசிலுக்கு அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டம் தெரிந்திருக்கலாமோ? பாசப்பரிவுடன் தமிழரசியின் கைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/77&oldid=664149" இலிருந்து மீள்விக்கப்பட்டது