பக்கம்:தாய் மண்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பற்றித் தூக்கினுள் திலகவதி அம்மை. “நேற்று உன்னை வீணுக அலையவிட்டு விட்டேன், இல்லையாம்மா?’’ என்றாள், தாய்மையின் தவிப்புடன்.

‘அப்படியொன்றுமில்லைங்க மதர்’ என்றாள் தமிழரசி, மகளின் சமாதானத்துடன்.

கவர்க் கடிகாரம் பத்துமுறை ஒலி பரப்பி ஓய்ந்தது.

‘அம்மா! :

‘சொல்லுங்க, மதர்’

‘அந்தச் சுவரில் இருக்கிற வாசகத்தை நீ மறக்க வில்லையே?’ என்று, சற்று முன்னம் அவள் படித்த அந்த அறிவுரையைக் காட்டினுள் தலைவி.

‘மறக்க முடியாதுங்க உங்க போதனைகளே! இப்போதும் பார்த்தேன், அம்மா!’

“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்!” என்றாள் தலைவி. உள்ளத்திலிருந்த முடிவு, இதழ்களை அண்டிக் கொண்டிருந் திருக்க வேண்டும்.

‘சொல்லுங்க!”

‘உன் மனத்திற்கு அவசியமாகவும் அவசரமாகவும் ஒரு துணையை ஏற்படுத்தியாகணும். என்னம்மா நீ நினைக்கிறே?” என்று நயமான சுவாதீனத்துடன் வினவி, அவள் கண்களைப் பரிசீலனை செய்தாள், அம்மை.

இம்மாதிரியான ஒரு கேள்வி, தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்புத் தெய்வத்தின் இதயத்திலிருந்து புறப்படுவது எவ்வளவோ இதமாகவும் இயல்பாகவும் அவளுக்குத் தெரிந்தது. ஆனலும், புறப்பட்ட கேள்வி அவள் முகத்தில் வேர்வையைக் கொட்டியது; சிரிப்பில் நாணத்தைக் காட்டியது. மறுகணம், தன் காதல் விவகாரம் எதுவும் தலைவிக்குத் தெரிந்திருக்கக் கூடுமோ என்றும் ஓர் ஐயப்பாடு உண்டானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/78&oldid=664150" இலிருந்து மீள்விக்கப்பட்டது