பக்கம்:தாய் மண்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

“சும்மா சொல்லு, தமிழரசி உன் அம்மாகிட்டே சொல்றதுக்கு நீ வெட்கப்படலாமா? நீ தமிழாசிரியை. உனக்குன்னு ஒரு அந்தஸ்து, கவுரவம் எல்லாம் உண்டு:இந்தச் சமூகத்திலே, அந்தவிதமான அந்தஸ்து, கெளரவத்துக் கெல்லாம் உனக்கு ஒரு துணை கூடிவிட்டால், இன்னும் ஒரு மாற்று அதிகப்படியான மதிப்பு ஏற்படும், அம்மா!’

தமிழரசி இப்போது அம்மையைப் பாசம் பொங்கப் பார்த்தாள். ‘உங்க இஷ்டம் அதுவானல், நான் அதையே கடமையாக் கொள்றேனுங்க, அம்மா!’

அம்மையார் சிரித்துக்கொண்டே, ‘ஒ. கே!’ என்றாள். தன் மாணவியான ஆசிரியையின் முதுகில் தட்டிக் கொடுத் தாள். ‘சரி அம்மா, செஸ் ஒரு ஆட்டம் ஆடலாமா? ஒரு மாறுதல் இருக்கட்டுமே!’ என்றாள்.

தமிழரசி இணங்கினுள். சதுரங்கக் காய்கள் உக்தியுடன் களம் மாறி, களம் புகுந்து விளையாடின.

தலைவிதான் ஜயித்தாள். ‘உன்னலே கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. முற்றுகைக் கட்டத்திலேயே நல்லாப் புரிஞ்சிட்டது!’ என்றாள்.

தமிழரசி என்ன சொல்வதென்று புரியாமல் சிரித்தாள். பிறகு, ரேடியோவை ட்யூன்” செய்தாள். மெல்லிசை வழிந்தது.

‘மாபெரும் நாடு-மாபெரும் மக்கள்!’ என்ற அரசாங்க விளம்பரத்தில் வீரர்களின் மகத்தான நாட்டுப் பணிகளைக் குறித்துப் போற்றப்பட்டிருந்ததைப் படித்தாள். பெண்குலம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருந் ததையும் படித்தாள்.

மணி பன்னிரண்டுக்குத் தமிழரசியும் அம்மையாரும் உண்டார்கள். இல்லத்தைச் சார்ந்த கோமதி என்ற யுவதியை மயிலை பாங்கர் ஒருவரின் தலைமகன் காதல் மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/79&oldid=664151" இலிருந்து மீள்விக்கப்பட்டது