பக்கம்:தாய் மண்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மண் காண, அவள் ஓர் அதிசயம். விண் கான, அவள் ஒர் அற்புதம். தமிழ் காண, அவள் ஒர் இலக்கியம். இலக்கியம் காண, அவள் ஓர் அசல்.

தமிழாசிரியை குமாரி தமிழரசிக்கு லால்பகதூர் சாஸ்திரி என்றால் ஒரு பக்தி. ஆகவே, அவளை என் இலக்கிய நெஞ்சத்தில் இருத்தி, அமரர் லால்பகதூர் அவர்களின் புனிதம் மிகுந்த புண்ணிய நினைவை என் இலக்கிய நினைவில் இருத்தி, இப் புதினத்தை அந்த இரு சக்திகளின் ஜீவன் களுக்குக் காணிக்கையாகப் படைத்து அஞ்சலி செய் கின்றேன். i

பாரத-பாகிஸ்தான் சமர் ஒய்ந்து, ஓர் அமைதியான உடன்பாட்டினைச் சிம்லா ஒப்பந்தம் தோற்றுவித்தது; நாட்டு விடுதலை வெள்ளி விழா கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நல்ல நேரத்தில், என்னுடைய இந்த நாவல் ஒரு தேசிய உணர்ச்சி துலங்க வெளிப்படுத்துவதில் நான் நிறைவு அடைகின்றேன். வானதி பதிப்பகத்தின் உரிமை யாளர் திரு ஏ. திருநாவுக்கரசு அவர்களின் தொடர்ந்த பாசத்துக்குத் தலை வணங்குகின்றேன்.

வ ண க் கம்.

வைமாநகர், 15, ஆகஸ்ட், 1972 பூவை எஸ். ஆறுமுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/8&oldid=664152" இலிருந்து மீள்விக்கப்பட்டது