பக்கம்:தாய் மண்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

செய்து கொள்ளப் போவதாகவும், சேகர் என்ற அனதை இளைஞனைப் பெரிய இடத்துப் பெண் ஒருத்தி மனம் விரும்பித் திருமணம் புரிந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தாள், தலைவி. ‘உன்னைப் பற்றித் திருவாளர் சொக்கநாதன் அவர்கள் எப்போதுமே ரொம்பவும் அக்கறைப்படுகிறார் தமிழரசி’ என்று உணவு வேலை முடிந்து சொன்னுள்.

‘ஊம் கொட்டிக் கேட்டாள் தமிழரசி,

‘எனக்கு ஒரு வாரம் டயம் கொடும்மா!’ என்று கோரினுள் தலைவி.

“எதற்குங்க மதர்?’ என்று ஒன்றும் புரியாமல் பாலகியை ஒத்துக் கெஞ்சிள்ை தமிழரசி,

“உனக்கு ஏற்ற ஒரு நல்ல உள்ளத்தைச் செட்டில் செய்யறதுக்கம்மா!’ என்று முன்னைக் காட்டிலும் தூக்குத லாகச் சிரித்தாள் திலகவதி.

தமிழரசிக்கும் வெட்கப்படத் தெரியும்!

“ மோகன்தாசுக்கு ஜே ! ?

ஒன்பது

“இதோ வந்துவிடப் போகிறேன்!” என்று பூச்சாண்டிக். காட்டிக் கொண்டிருந்தது முகில் வானம்.

அதற்குள் ‘இதோ, நான் வந்துவிட்டேன்! என்று குடி யிருந்த வீட்டில் வந்து குதித்துவிட்டாள் தமிழரசி. இல்லத் தாய் கொடுத்த தீபாவளி விருந்தும் தீபாவளிப் பலகாரங் களும் இன்னமும் அவள் வயிற்றில் தேங்கியிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. இரண்டு நாள் நல்ல விருந்து. குடையை அதன் இடத்தில் சாத்தி வைத்தாள். கூடத்தி லிருந்த படுக்கையை உதறிப் போட்டாள். அலமாரியைக் குடைந்தாள். நாட்குறிப்பு, எழுதும் தாள்கள், பேன ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/80&oldid=664153" இலிருந்து மீள்விக்கப்பட்டது