பக்கம்:தாய் மண்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

வற்றை எடுத்து வைத்தாள். வானெலிப் பேச்சை அவள் தயார் செய்தாக வேண்டும். இரண்டு மூன்று நாளேக்குள் அனுப்பிவிட வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள்’ என்பது பேச்சின் மகுடம்.

‘ஐம்பெருங்காப்பிய மகளிர், பாஞ்சாலி, மிதிலைச் செல்வி என்று பட்டியல் வளர்ந்தது. பெண்ணின் பெருமை’ நூல் வந்தது. காந்திஜியின் சிந்தனைகள் துணை நின்றன. பாரதியின் பாக்கள் ஒலித்தன. தமிழ்மறை கை விளக்காயிற்று!

ஜமுக்காளத்தில் சம்மணமிட்டுக் குந்தினுள் தமிழரசி. ஜன்னல்களின் வழியே மயங்கி வந்தன மாலைக்கதிர்கள். கோட்டை மல்லிகைப்பூக்கள் அவளைச் சுற்றிச் சிதறிக் கிடந்த படி, வாசனையைப் பெருக்கிக் கொண்டிருந்தன.

அவள் பேளுவும் கையுமாகச் செயற்பட்டாள். அவளது இலக்கிய மனம் ஒளி கூட்டத் தொடங்கியது.

கற்பின் மகளிரைத் தோற்றுவாயாகக் கொண்டு, இலக் கியத்தில் வாழ்ந்துவரும் பெண் திலகங்களை முதற் கட்ட மாகச் சித்திரித்து, தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் தொன்று தொட்டு இன்றுவரை கொண்டிருக்கும் நிலையான தகுதி களைக் கட்டுரையின் அடுத்த கட்டமாக்க வேண்டும். பெண் மைக்கு வாழ்த்துச் சொல்லி, புதுமைப் பெண்ணுக்கு இலக் கணம் வகுத்த அறிஞர்களை நினைவுகூர வேண்டும். இவை மீண்டும் இரண்டு மூன்று பகுதிகளை இட்டு நிரப்பும். உலக அரங்கத்தில் இந்தியப் பெண்களின் புகழ் குறித்தும் ஒப்பு நோக்குச் செய்ய வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தில் பெண் களின் கடமைகளை நாட்டுப்பணிக்குக் காணிக்கை வைக்கும் சீரிய பணியில் இன்னும் விரிந்த அளவில் உட்படுத்த வேண் டும் என்கிற கருத்தை வலியுறுத்த வேண்டும். வணக்கத்துக் குரியது பிறந்த மண். அதேபோல, வணக்கத்துக்குரியது தாய்க்குலம். தாயும் மண்ணும்தான் வாழ்வு. அதுவே தான் வாழ்க்கையின் தியாக மனப்பான்மைக்கு ஒழுக்கம் கமிகுந்த-உயிர்ப்பான உட்பொருள் என்னும் மையக்கருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/81&oldid=664154" இலிருந்து மீள்விக்கப்பட்டது