பக்கம்:தாய் மண்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சொல்லப்பட வேண்டும். பின், அனைத்தையும் கோடிட்டுக் காட்டினல் முடிவுரை அமைந்துவிடும்!...

திடீரென்று எதையோ நினைவு கூர்ந்தாள். வரும் வழியில் சந்தித்த ஒரு பிச்சைக்காரனைப்பற்றி எண்ணினுள். இரண்டு கால்களும் இழந்திருந்த அவன், சிறிய வண்டியை ஒட்டிக்கொண்டு பிச்சைகேட்ட விவரம் தோன்றியது. ஒதுக்கிவிட முடியாத ஒர் உண்மையாக அவன் அவளுடைய மனத்தில் எழுந்தான். பத்துக் காசு போட்டுவிட்டு நகர்ந் தாள். அவன் நிறைவுடன் சிரித்து நினைவுடன் நன்றி சொன்னன்!

குறிப்புக்களை எண் வரிசையிட்டுக் குறிப்பெடுத்து முடித் ததும், அவள் ஓய்வுக்காகச் சில விடிைகள் சும்மா இருந்தாள். பிறகு, பத்திரிகையைப் புரட்டினுள். ஞாயிற்றுக்கிழமைப் பதிப்பு, பாகிஸ்தானத்துடன் சண்டையிட்டு, பயன்படாத அளவில் படு ஊனம் அடைந்துவிட்ட நம் ராணுவ வீரர்கள் தலைமை நகரத்தில் தகுந்த சிகிச்சைகள் பெற்றபின் அவரவர் கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் புறப்பட்டபோது, அவர் களைத் தற்காப்பு மந்திரி வழியனுப்பி வைத்த நிகழ்ச்சிகள் படங்களாகி அச்சிடப்பட்டிருந்தன. முகம் புரியாத - ஆனல், அகம் புரிந்த அவ்வீரத் திலகங்களுக்கு அவள் மனம் வீர அஞ்சலி செய்தது.

மழை பொழிந்தது.

ஜன்னல் கதவுகளை அடைத்து, விளக்குகளைப் போட். உாள்,

பாகிஸ்தானின் ‘பாட்டன் டாங்குகளுடன் சியால் கோட் பகுதியில் எதிர்த்துப் போராடி நாட்டுக்காக உயிர்த். தியாகம் புரிந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் சீரிய தியாகத் தைப் போற்றி இந்திய அரசாங்கம் அன்னருக்குப் ‘பரம வீர சக்கரம் வழங்கியிருக்கும் விவரம் கண்டிருந்தது. படத்தி லிருந்த அந்த அமரத் தியாகிக்குத் தலைதாழ்த்தி வணக்கம். தெரிவித்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/82&oldid=664155" இலிருந்து மீள்விக்கப்பட்டது