பக்கம்:தாய் மண்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

“சரித்திரத்தைச் செய்திருக்கிறீர்கள். சரித்திரத்தில் வாழ்வீர்கள் நீங்கள் எல்லோரும்:

ஜவான்களின் படங்களைக் கண்டதும், பட்டாளத்தில் பணிபுரியும் சீதையின் தமையனைப் பற்றிய ஞாபகம் வந்தது.

ஒரு நினைவுச் சிதறல்: இல்லத் தலைவியுடன் பிரயாணம் செய்து, கோடை. விடுமுறையைக் கழித்துவிட்டு, பள்ளிக்கூடம் திறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக அவள் வீடு வந்து சேர்ந்தாள். அப்போது சீதை ஒடி வந்து, ஏன்ைேட பிரதர் வந்திருக் காங்க!’ என்று தெரிவித்தாள். தமிழரசி நிலைப்படியில் நின்ற வாக்கிலேயே தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். ராணுவ உடைகள் திகழ, சிரித்த முகத்துடன் வடக்கே புறப் பட்டுக் கொண்டிருந்தான் அவன். பெற்ற தெய்வங்களை வணங்கி ஆசி பெற்றுச் செல்லும் கட்டத்தில் அவனது அழகிய, கம்பீரமான முகம் அவள் பார்வையில் நெளிந்தது. அக்காட்சி அவள் மனத்தில் பசுமையாக இப்போதும் விளங்கிக்கொண்டிருந்தது. ‘உங்க குடும்பம் ரொம்பப் பாக்கியம் செய்தது, சீதை’ என்று பாராட்டிச் சொன்ன பேச்சு நேற்றுச் சொன்னது போலவே இருக்கிறது.

சீதையின் தமையன் பெயர்: மோகன்தாஸ். மழை நின்று நேரம் கடந்திருக்குமோ? - அவள் எழுந்தாள். சாளரக் கதவுகளைத் திறந்தாள். சீதளக் காற்று உடம்புக்கும் உள்ளத்துக்கும் உணக்கையாக, இருந்தது.

பரபரப்புடன. ஜே. ஒலிகள் விண்முட்ட ஒலிப்பது, கேட்டு அவள் வாசலுக்கு வந்தாள்.

தாயின் மணிக்கொடிகள் ஊர்வலம் வந்து கொண்டிருந்: தன. மத்தியில் ஜீப் ஒன்று கதர்க்கொடி அலங்காரத்துடன் பவனி வந்தது, தெரு வழியே! ‘மோகன்தாசுக்கு ஜே!...”* என்ற கோஷங்கள் நெருங்கி வந்தன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/83&oldid=664156" இலிருந்து மீள்விக்கப்பட்டது