பக்கம்:தாய் மண்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

“ஜீப்"பில் பவனி வந்த மோகன்தாஸின் பேரில் தமிழரசி :பின் கனிவுப் பார்வை நிலைத்தது. அவள் கைகளைப் பாங்குற உயர்த்தி வணக்கம் தெரிவித்தாள். ராணுவ உடுப்புகள் திகழ வீற்றிருந்த மோகன்தாஸ் நன்றியுடன் அவளைப் பார்த்துப் பதில் வணக்கம் தெரிவித்துப் புன்முறுவல் காட்டிஞன்.

ஆம்; சீதையின் தமையன்தான்! உள்ளே விரைந்தாள் தமிழரசி. செந்தில் குமரனுக்குப் போட்டிருந்த மலர்மாலையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அடக்கமான தெருவில் அடங்க முடியாத மக்கள் கூட்டம். ‘நில்லுங்க! எல்லாரும் வண்டியை நிறுத்துங்க!’ என்று எச்சரித்தார் தொண்டர் தலைவர். - -

சீதையின் பெற்றாேர்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஜீப்” காரை நோக்கி ஓடி வந்தார்கள். தயங்கியபடி பின்னலேயே வந்தாள் சீதை. அப்போது* வாழ்க தியாகி மோகன்தாஸ்’ என்ற வாழ்த்தொலி களுக்கும் கையொலிகளுக்கும் நடுவில் இரண்டு தொண்டர் கள் சேர்ந்து தமிழ்மகன் மோகன்தாஸ்ை நாற்காலியுடன் து.ாக்கிக்கொண்டு வந்து, நடைபாதை இடைவெளியிலிருந்த குடிசைக்கு முன்பாகப் பாயில் வைத்தார்கள். கைக்குப் பிடிப்பான ஊன்று கோல்கள் இரண்டை ஒருவர் கொண்டு வந்து வைத்தார். மீண்டும் ஜே கோஷங்கள் வான

ளாவின. .

“ஐயோ, மகனே! ரெண்டு காலையுமே நீ இழந்துப் புட்டியாப்பா? என்று ஓலமிட்டார்கள், மோகன்தாஸின் தாயும் தந்தையும்.

“அப்டா, அம்மா! எதுக்காக நீங்க அழlங்க? அழக் கூடாது. அழுதால், நான் கோவிச்சுப்பேன்! அழவே கூடாது! சிரியுங்கள்!” என்று வேண்டினன் வீரன் மோகன் தாஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/84&oldid=664157" இலிருந்து மீள்விக்கப்பட்டது