பக்கம்:தாய் மண்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

சீதை பதறித் துடித்தவளாக, தன் பெற்றாேர்களின் வாய்களைப் பொத்தினுள். .

தமிழரசி ஒதுங்கி நின்றவள், எட்டி வந்து பார்த்தாள். அவள் கண்கள் நிரம்பின. இதயம் நிரம்பியது. உணர்ச்சியின் பதுமை ஆளுள். மோகன்தாஸின் முன்னே ஓடி மார்பு மண்ணில் பதிய வணங்கி எழுந்தாள். கையில் ஊசலாடிக் கொண்டிருந்த மாலையை அவனுடைய கழுத்தில் போட்டு விட்டு மறு முறையும் கைகூப்பி அஞ்சலி செலுத்தினுள். உணர்ச்சியும் அறிவும் திருப்திப்பட்டு அவளுக்குத் தன்னிலை ஊட்டியபோது, அவள் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்ற நூற்றுக்கணக்கான கண்களைப் பார்த்தாள். ஒடிய கண்ணிரைத் துடைத்துக் கொள்ள அப்போதுதான் அவளுக்கு ஓடியது.

தமிழரசியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந் தான் மோகன்தாஸ். அவன் விழிகளில் மகிழ்ச்சிக் கண்ணிர் பெருகியது.

பாசத்துக்கு அன்பு பூப்பாலி செய்தது போலும்!

மோகன்தாஸின் செயற்கைக் கால்கள் இரண்டினையும் தொட்டுத் தொட்டுத் தங்களது ஊனக் கண்களிலே ஒற்றிக் கொண்டார்கள், அவனை ஈன்றவர்கள். அழுகையைத் துண்டிக்க முடியவில்லை. அவர்களால். -

தமிழரசி, அவர்களை நெருங்கிள்ை. “ஐயா, பெரியவரே! அம்மா... தாயே! நீங்க எவ்வளவோ பாக்கியம் செஞ்சிருக்க வேணும், இப்படிப்பட்ட வீரரை உங்க பிள்ளையாய்ப் பெற்றதுக்கு. நீங்க வாய்விட்டு அழக்கூடாது. மனம்விட்டுச் சிரிக்க வேணும். தாய்நாட்டு மானத்தைக் காப்பாற்றி, தாய்மண்ணைக் கட்டிக் காத்திட்ட கடமைக்காக உங்க மகன் அடைந்திருக்கிற இந்தக் கோலம் அவரைச் சரித்திரத்திலே சிரஞ்சீவியாய் வாழச் செய்திடுச்சு!... சீதை, நீ விஷயம் தெரிஞ்ச பெண். தாய் நாட்டைக் காக்கத் தங்கள் புதல்வர் களிடம் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பின வீரத், தாய்மார்களைப் பத்தி நீ படிச்சிருக்கியே, அதைப்பத்தி உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/85&oldid=664158" இலிருந்து மீள்விக்கப்பட்டது