பக்கம்:தாய் மண்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பெற்றேர்கள் கிட்ட சொல்லம்மா...’ என்று கேட்டுக் கொண்டாள். .

‘அக்கா சொல்றது அவ்வளவும் நிஜம். அண்ணன் பெற்று வந்திருக்கிற மாபெரும் பரிசை நெனேச்சு நாம சந்தோஷப்பட வேணுமாக்கும்’ என்று தெரிவித்தாள் சீதை. எவ்வளவோ முயற்சி செய்தும், தேம்பலைக் கட்டுப் படுத்த முடியவில்லே அவளால்.

தலைமைத் தொண்டர் பழத்தட்டை எடுத்து வந்து தமிழ் மகன் முன்னே வைத்தார்.

“மோகன்தாஸ், பணத்தைப் பத்திரமா வச்சுக்குங்க. நாளை அல்லது நாளே மறுதினம் மறுபடியும் நாம் கனம் முதல் மந்திரி அவர்களைப் பார்க்கலாம். தலைவர் அவர்களும் டில்லி யிலிருந்து திரும்பிவிடலாம். அவங்களையும் சந்திப்போம்!... சரி, எல்லோரும் புறப்படுங்க. இப்போது எங்க வீட்டிலே வந்து தங்கிக் கொள்ளலாம். வேறு வீடு பார்த்ததும், அதில் நீங்க தங்கிக் கொள்ளலாம்!’ என்றார் அவர்.

வேறு வீடு பார்க்கும் வரையிலும் என் வீட்டில் தங்கலாம். நான் கஸ்தூரி அன்னை இல்லத்துக்குப் போய்க் கொள்கிறேன்!” என்று சொன்னுள் தமிழரசி,

‘'வேண்டாங்க அம்மா! உங்க எல்லோரது அன்புக்கும் நன்றிங்க. பிறந்து வளர்ந்து ஆளான இந்த மண்ணிலே ஆசைதிரப் படுத்துத் தூங்கில்ைதான் எனக்கு நிம்மதி வரும். இப்போ புதுசா எனக்கு என்ன பெருமை வந்திட்டுது? என் தாய்த் திருநாட்டுக்காக-நான் பிறந்த பொன்னட்டுக்காக என்னலான எளிய-தூய்மையான கடமையை மனப்பூர்வ மாகச் செஞ்சேன். இது நான் செய்ய வேண்டிய கடமை. இது ரொம்ப சொற்பம். தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செஞ்ச நூற்றுக்கணக்கான என் சகோதரர்களுக்குக் கிடைச்ச அந்தப் பாக்கியத்தைப் போல எனக்கும் கிடைச்சிருந்தால் மனம் ரொம்பவும் ஆறுதல் பட்டிருக்கும். முதல் மந்திரி அவர்களிடம் சொன்னதையேதான் இப்பவும் சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/86&oldid=664159" இலிருந்து மீள்விக்கப்பட்டது